Listen to the latest songs, only on JioSaavn.com
 

Euro 2020: ரொனால்டோ 700...இங்கிலாந்து வெற்றி...யூரோ 2020 தகுதி சுற்று அப்டேட்

Updated: 16 October 2019 11:05 IST

சி பிரிவில் ஜெர்மனி – எஸ்தோனியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3-0 என ஜெர்மனி வெற்றி பெற்றது.

Ukraine vs Portugal, Euro Qualifiers: Ukraine Qualify For Euro 2020 Despite Cristiano Ronaldos 700th Goal
Euro Qualifiers: யூக்ரேன் – போர்ச்சுகல் அணிகள் மோதிய ஆட்டத்தில் 2-1 என கோல் கணக்கில் யூக்ரேன் அணி வெற்றி பெற்றது © AFP

சர்வதேச கால்பந்து உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றாக கருதப்படுவது யூரோ தொடர். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் யூரோ தொடருக்கான தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது. தகுதி சுற்றின் 8ம் நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள யூக்ரேன் – போர்ச்சுகல் அணிகள் மோதிய ஆட்டத்தில் 2-1 என கோல் கணக்கில் யூக்ரேன் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2020 யூரோ தொடருக்கு தகுதி பெற்றுள்ளது யூக்ரேன்.

போர்ச்சுகல் அணிக்காக அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ கோல் அடித்தார். அவர் அடிக்கும் 700 வது கோல் இதுவாகும். இருப்பினும் அவரால் போர்ச்சுகல் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. யூக்ரேன் அணிக்காக ரோமன் மற்றும் ஆண்ட்ரி ஆகியோர் கோல் அடித்தனர். போர்ச்சுகல் அணியின் சார்பாக ரொனால்டோ மட்டுமே 72 வது நிமிடத்தில் கோல் அடித்தார். பி பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் செர்பியா 2-1 என கோல் கணக்கில் லூத்தானியாவை வீழ்த்தியது.

ஏ பிரிவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6-0 என கோல் கணக்கில் பல்கேரியா அணியை எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிக்ள் பெற்று ஏ பிரிவின் முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து. மற்றொரு ஏ பிரிவு ஆட்டத்தில் கோசோவோ 2-0 என கோல் கணக்கில் மாண்டேனெக்ரோ அணியை வீழ்த்தியது.

சி பிரிவில் ஜெர்மனி – எஸ்தோனியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3-0 என ஜெர்மனி வெற்றி பெற்றது. இதே பிரிவிலுள்ள நெதர்லாந்து – பெலாரஸ் அணிகள் மோதிய போட்டியில் 2-1 என நெதர்லாந்து வெற்றி பெற்றது.

ஹெச் பிரிவில் பிரான்ஸ் – டர்க்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என டிரா ஆனது. ஐஸ்லாந்து – அந்தோரா ஆட்டத்தில் 2-0 என ஐஸ்லாந்து வெற்றி பெற்றது. இதே பிரிவிலுள்ள மோல்தோவா – அல்பானியா ஆட்டத்தில் 4-0 என அல்பானியா வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • தகுதி சுற்றின் 8ம் நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
  • 2020 யூரோ தொடருக்கு தகுதி பெற்றுள்ளது யூக்ரேன்.
  • போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ மட்டுமே 72 வது நிமிடத்தில் கோல் அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
போர்த்துக்கீசிய மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைப் பிரிவை வழங்கவுள்ள ரொனால்டோ!
போர்த்துக்கீசிய மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைப் பிரிவை வழங்கவுள்ள ரொனால்டோ!
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
Real Madrid vs Barcelona: ரியல் மாட்ரிட் வெற்றியை கொண்டாடிய ரொனால்டோ!
Real Madrid vs Barcelona: ரியல் மாட்ரிட் வெற்றியை கொண்டாடிய ரொனால்டோ!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
Advertisement