ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!

Updated: 23 July 2018 11:51 IST

2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியின் கடைசி நாளில் 2 தங்கங்கள் வென்றனர் இந்திய வீரர்கள்

India Produce Strong Performance At Asian Junior Wrestling
© Twitter

2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியின் கடைசி நாளில் 2 தங்கங்கள் வென்றனர் இந்திய வீரர்கள். 

86 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட தீபக் புனியா, தங்கம் வென்றார். அதைப் போலவே, 74 கிலோ எடைப் பிரிவில் சச்சின் ராதி தங்கம் வென்று அசத்தினார். மேலும் 61 கிலோ எடைப் பிரிவில் சூரஜ் கோகடே மற்றும் 125 கிலோ எடைப் பிரிவில் மோகித்தும் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். 

இந்த ஆண்டு, ஈரான் நாடு சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. மொத்தம் 11 தங்கம் வென்ற ஈரான், 189 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. இந்தியா, 173 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், 128 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. 

Comments
ஹைலைட்ஸ்
  • 86 கிலோ எடைப் பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்
  • தீபக், துர்க்மெனிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்
  • சூரஜ் மற்றும் மோகித் ஆகிய வீரர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்
தொடர்புடைய கட்டுரைகள்
'பேக் டு பேக்' தங்கம் வென்று அசத்தும் வினேஷ் பகோத்...!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
Advertisement