
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகரான சவுரவ் கங்குலி, ரிஷப் பன்ட் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது உலகக் கோப்பை நீக்கம் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார். "பன்ட்டுக்கு 21 வயதுதான் ஆகிறது. பன்ட் ஒரு அசாதரமான வீரர். அவர் எதுகுறித்தும் கவலைப்பட தேவையில்லை" என்றார். ராஜஸ்தானுக்கு எதிராக 36 பந்தில் 78 ரன்கள் அடித்து அசத்தினார் பன்ட்.
அதன் பிறகு பேட்டியளித்த பன்ட், "என் மனதில் இன்னும் உலகக் கோப்பைதான் உள்ளது" என்றார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பேட்டிங் ஆலோசகரும், முன்னாள் இந்திய கேப்டனுமான கங்குலி உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகாதது குறித்து கவலை கொள்ள வேண்டாம். அது பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம்" என்றார்.
11 ஆட்டங்களில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி வெற்றிக்கு கங்குலி தான் காரணமா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, "நான் ஆடவில்லை. ஆடுவது வீரர்கள் தான். அவர்கள் தான் காரணம்" என்று பதிலளித்துள்ளார்.
பின்னர், கங்குலி தோனியையும் வெகுவாக பாராட்டினார். அதேபோல் 4 ஆட்டங்களை தொடர்ந்து தோற்றாலும் கொல்கத்தா ஒரு சிறந்த அணி என்று கூறினார்.
"உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இந்தியா நிச்சயம் உள்ளது என்றார்" கங்குலி. மேலும் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா , மேற்கிந்திய தீவுகள் முன்னேற வாய்ப்புள்ள அணிகளாக தெரிவித்துள்ளார்.