நிறைவுற்ற போட்டிகள்   
முதல் அரையிறுதி ஆட்டம், ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர், Jul 09, 2019
இந்தியா இந்தியா
221 (49.3/50)
நியூசிலாந்து நியூசிலாந்து
239/8 (50.0/50)
நியூசிலாந்து அணி, 18 ரன்னில் இந்தியா வை வென்றது

100 கோடி இதயங்கள் உடைந்தன, நியூசி-யிடம் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!

Updated: 10 July 2019 21:31 IST

India vs New Zealand Semi-final Live Score, 2019 ICC Cricket World Cup: ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் மீண்டும் தொடரவுள்ளது.

India vs New Zealand Semi final Reserve Day, Manchester Weather Updates, Live Score, IND vs NZ Live Cricket Score, World Cup 2019: India Look To Wrap Up New Zealand Amid Rain Threat
India vs New Zealand Semi-final Live Score: இறுதிச்சுற்றுக்கு செல்லும் முனைப்பில் நியூசிலாந்தை எதிர்க்கொள்ளும் இந்தியா. © Twitter

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, நியூசிலாந்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியது. 

46.1 - வது ஓவரின்போது நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இதில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. 

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்ததாக களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, அடுத்து வந்த கோலி ஆகியோர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். 

பந்த் சிறிது நேரம் நீடித்தார் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரும் ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் ஆட்டமிழந்தார். 

இதன்பின்னர் தோனி - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். நிதானமாகவும், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால், நம்பிக்கையற்றுக் கிடந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவித்தனர். இதன்பின்னர், போல்ட் பந்து வீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா வெளியேறினார். 

59 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்களை குவித்தார். இவற்றில் தலா 4 சிக்ஸரும், ஃபோரும் அடங்கும். அடுத்ததால் 50 ரன்கள் தோனி எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியைத் தழுவியது. 

நாளை மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிறன்று நியூசிலாந்தை எதிர்கொள்ளும்

(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
Advertisement