அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் இந்தியாவின் உத்தேச அணி!

Updated: 09 July 2019 11:52 IST

10 அணிகள் கொண்ட தொடரில், இந்த இரு அணிகள் மோதவிருந்த நாளில் மழை குறிக்கிட்டதால், ஆட்டம் தடைப்பட்டது.

World Cup Semi Final, India vs New Zealand: India Probable Playing XI, New Zealand Probable Playing XI
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி பெற்று சிறப்பாக ஆடி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. © AFP

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. இந்தத் தொடரில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. 10 அணிகள் கொண்ட தொடரில், இந்த இரு அணிகள் மோதவிருந்த நாளில் மழை குறிக்கிட்டதால், ஆட்டம் தடைப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி பெற்று சிறப்பாக ஆடி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை விட அதிக நெட் ரன் ரேட் பெற்றதால், நான்காம் இடத்தை பிடித்து அரையிறுதியில் நுழைந்துள்ளது.

மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியை வென்றது. முதல் அரையிறுதி போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருவேளை மழையால் ஆட்டம் தடைப்பட்டால், புதன்கிழமை ஆட்டம் நடத்தப்படும். இந்த தீவிர போட்டியில், சஹால் ஆடும் லெவனில் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையுடனான கடந்த போட்டியில் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. 

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஹால் அணியில் இணைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா இலங்கையுடனான கடந்த போட்டியில் ஒரு விக்க்கெட்டை வீழ்த்தினார். குல்தீப், இந்தத் தொடரில் 7 போட்டியிகளில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும், விராட் கோலி அவருக்கு இந்த அரையிறுதி போட்டியில் இன்னொரு வாய்ப்பு அளிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார், இந்தப் போட்டியிலும் தொடரலாம் என்று கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 பந்து வீச்சாலர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 

பயிற்சி ஆட்டத்தில் சிறந்து செயல்பட்ட தினேஷ் கார்த்திக், மிடில் ஆர்டரில் இடம்பெற்று ஆடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ஹென்றி நிக்கோலஸ் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த இடண்டு போட்டிகளில் 0, 8 என்ற ரன்களை மட்டுமே குவித்தார். ஆட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்ரோ 12,0, 9 என்ற ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

உத்தேச அணி:

இந்தியா: ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பன்ட், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், பும்ரா.

நியூசிலாந்து: மார்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஸம், கோலின் டி கிராண்ட்கோம், மிட்சல் சாண்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பன்ட், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், பும்ரா, கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால்.

நியூசிலாந்து: மார்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஸம், கோலின் டி கிராண்ட்கோம், மிட்சல் சாண்ட்னர், டிம் சௌதி, மேட் ஹென்றி, டாம் ப்லண்டெல், லோக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஹால் அணியில் இணைக்கப்படலாம்
  • இன்று மழை குறிக்கிட்டால் ஆட்டம் புதனன்று நடைப்பெறும்
  • புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தை பிடித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
Advertisement