உலகக் கோப்பை: நியூசிலாந்து நாடு திரும்பும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Updated: 16 July 2019 16:02 IST

சூப்பர் ஓவர் ஆடப்பட்டத்து. அதிலும் டை ஆனதால், பவுண்டரி எண்ணிக்கை வைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

New Zealand Homecoming Ceremony On Hold
தொடர்ந்து இரண்டாவது முறையாக நியூசிலாந்து அணி உலகக் கோப்பையில் ரன்னர்-அப் ஆனது. © AFP

உலகக் கோப்பை முடிந்து நியூசிலாந்து அணி நாடு திரும்பும் நிகழ்வு சில சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் அதிக பவுண்டரிகள் கொண்ட விதிப்படி தோற்றது. இரு அணிகளும் 100 ஓவர்கள் விளையாடிய பிறகும் வெற்றியாளரை முடிவு செய்ய முடியவில்லை. பின்னர் சூப்பர் ஓவர் ஆடப்பட்டத்து. அதிலும் டை ஆனதால், பவுண்டரி எண்ணிக்கை வைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து தலைமை நிர்வாகி கூறுகையில், "வீரர்கள் அனைவருக்கும் மரியாதை தெரிவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இங்கிலாந்துக்கு சென்ற எல்லா வீரர்களும் ஒன்றாக நாடு திரும்பவில்லை. சிலர் விடுமுறையை கொண்டாடவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

"இந்த சமயத்தில், சில வீரர்கள் வெவ்வேறு நேரத்தில் வரவுள்ளனர், சிலர் இப்போதைக்கு வருவதாக இல்லை, இன்னும் சிலர் விளையாட வேண்டிய சூழலில் உள்ளனர், எனவே இது சாத்தியம் இல்லை."

"இதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், வரும் வாரங்களில் எடுத்து நடத்த முயற்சி செய்யலாம்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
Advertisement