ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!

Updated: 07 June 2019 12:52 IST

நேற்றைய போட்டியில் இந்திய ராணுவத்தை பெருமைபடுத்தும் விதமாக மாலிடன் பேட்ஜ் உள்ள க்ளவுசை அணிந்து ஆடினார்.

World Cup 2019: MS Dhoni Sports Gloves With Army Insignia, Twitter Salutes
2011 உலகக் கோப்பையை வென்ற கேப்டனான தோனி தற்போது இந்திய அணியின் மூத்த வீரராக செயல்பட்டு வருகிறார். © AFP

2011 உலகக் கோப்பையை வென்ற கேப்டனான தோனி தற்போது இந்திய அணியின் மூத்த வீரராக செயல்பட்டு வருகிறார். நேற்றைய போட்டியில் இந்திய ராணுவத்தை பெருமைபடுத்தும் விதமாக மாலிடன் பேட்ஜ் உள்ள க்ளவுசை அணிந்து ஆடினார். உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் ஆட்டத்தில் பெலுக்வாயோவை ஸ்டெம்பிங் செய்தும், 34 ரன்களை குவித்தும் அசத்தினார் தோனி. இந்திய பாரா ஸ்பெஷல் படையின் குறியீட்டை க்ளவுஸில் அணிந்திருந்தது பெருமைப்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இந்திய ராணுவத்துக்கும், தோனிக்கும் பெருமை சேர்த்தது.

2011 தோனிக்கு லெப்டினெட் கலோனல் பதவி வழங்கப்பட்டது. ஆக்ராவில் இதற்காக பயிற்சியும் பெற்றார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து பாராசூட் மூலம் குதித்து அசத்தினார்.

ராணுவத்தை அதிகம் நேசிக்கும் கேப்டன் ராணுவத்தில் இணைவதை விருப்பமாக கூறியிருக்கிறார்.

புல்வாமா தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ராஞ்சியில் கேமோப்ளட்ஜ் கேப் அணிந்து ஆடினார்.

ரோஹித் ஷர்மா சதத்தால் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது. இதில் தோனியின் 34 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

இந்தியா ஜூன் 9 அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
Advertisement