15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்!!

Updated: 02 July 2019 17:24 IST

ஒருநாள் போட்டிகளை பொருத்தளவில்லை தினேஷ் கார்த்திக் 91 மேட்ச்களில் 31.03 ரன்கள் சராசரியாக உள்ளது. இவற்றில் 9 அரைச்சதங்கள் அடங்கும். அரையிறுதி சுற்றில் இடம்பெறுவதற்கு இந்தப் போட்டியில் வங்க தேசம் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

India vs Bangladesh: Dinesh Karthik Gets First World Cup Match, 15 Years After Making ODI Debut
ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார் © AFP

கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக் அறிமுகம் ஆகியுள்ளார். முன்னதாக கடந்த 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது, தினேஷ் கார்த்திக் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் கேதார் ஜாதவுக்கு பதிலாக தினேஷ் களமிறங்கியுள்ளார். 

இதேபோன்று ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயம் குணமானதை தொடர்ந்து புவனேஷ் குமார் அணியில் இடம் பிடித்திருக்கிறார். 

2007- உலகக்கோப்பையில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக், அடுத்து நடைபெற்ற 2011, 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதில் அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் அவர் 253 ரன்களை தினேஷ் குவித்திருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளை பொருத்தளவில்லை தினேஷ் கார்த்திக் 91 மேட்ச்களில் 31.03 ரன்கள் சராசரியாக உள்ளது. இவற்றில் 9 அரைச்சதங்கள் அடங்கும். அரையிறுதி சுற்றில் இடம்பெறுவதற்கு இந்தப் போட்டியில் வங்க தேசம் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Deodhar Trophy Final: பிரமிக்க வைக்கும் தினேஷ் கார்த்திக்கின் ஒற்றை கை கேட்ச்!
Deodhar Trophy Final: பிரமிக்க வைக்கும் தினேஷ் கார்த்திக்கின் ஒற்றை கை கேட்ச்!
Vijay Hazare Trophy: இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை வீழ்த்தியது கர்நாடகா!
Vijay Hazare Trophy: இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை வீழ்த்தியது கர்நாடகா!
Vijay Hazare Trophy: இறுதி போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு அணி!
Vijay Hazare Trophy: இறுதி போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு அணி!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
Advertisement