''உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகுவதுதான் இலக்கு'' - பாகிஸ்தானின் பாபர் ஆசம் விருப்பம்!!

Updated: 27 June 2019 15:20 IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது.

New Zealand vs Pakistan: Babar Azam Says "Aim Is To Become World Best Batsman"
101 ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அணியை வெற்றி பெறச் செய்தார் பாபர் ஆசம். © AFP

உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆகுவதுதான் இலக்கு என்று பாகிஸ்தான் இளம் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாகிஸ்தான் அணி நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அந்த அணி தக்க வைத்துக்  கொண்டுள்ளது. வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம், 'நான் ஆடிய ஆட்டங்களில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டம் சிறப்பானதாகும். உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆக வேண்டும் என்பதுதான் எனது இலக்கு' என்று தெரிவித்தார். 

நியூசிலாந்துக்கு எதிராக ஆசம் அடித்த 101 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் வெற்ற இலக்கை எட்டியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 237 ரன்களை எடுத்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

முதலில் நடந்த 5 போட்டிகளில் பாகிஸ்தான் 3- போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் கொதிப்படைந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. 7 போட்டிகளில் 3-ல் வெற்றி என்ற கணக்குடன் பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. 

அடுத்ததாக சனிக்கிழமை பாகிஸ்தான் ஆப்கனை எதிர்கொள்கிறது. இதில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் அரையிறுக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். 

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பாபர் ஆசம், முதல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்திருந்தாலும், மீண்டெழுந்து அரையிறுதிக்குள் நுழையும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • டி 20 போட்டியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஆசம் உள்ளார்
  • அடுத்த ஆட்டங்களில் ஆப்கன், வங்க தேசத்தை எதிர்கொள்கிறது பாக்.
  • உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்!
பாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
Advertisement