கெயிலை பார்க்க ட்ரெஸிங் ரூமுக்கு வந்த பாப் உலகின் ராணி!! பேட்டை பரிசாக அளித்த கெய்ல்!

Updated: 02 July 2019 15:26 IST

உலகக்கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான ஆட்டத்தைப் பார்ப்பதற்கு பாப் உலகின் ராணி ரிஹானா வந்தார்.

Chris Gayle Meets Pop Star Rihanna In West Indies Dressing Room. Watch
ரிஹானாவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்த கெய்ல் © Twitter

பாப் இசை உலகின் ராணி ரிஹானா, கிறிஸ் கெயிலை காண வெஸ்ட் இண்டீசின் ட்ரெஸிங் ரூமுக்கு வந்தார்.  அவருக்கு தனது பேட்டை கையெழுத்திட்டு கிறிஸ் கெய்ல் பரிசாக வழங்கினார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று அந்த அணி இலங்கையை எதிர்கொண்டது. 

இந்த போட்டியை காண்பதற்கு பாப் இசை உலகின் ராணி ரிஹானா வந்திருந்தார். 31 வயதாகும் அவர் இசை உலகின் மிகவும் பணக்கார பெண் என்று பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

கிறிஸ் கெய்லின் ஆட்டத்தை காண வந்த அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆடுகளத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆட்டத்தை விடவும் ரிஹானாவை பார்ப்பதில்தான் குறியாக இருந்தனர். 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 338 ரன்களை குவித்தது. இதன்பின்னர் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 315 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 48 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது அவரது ஆட்டத்தைக் காண வந்த ரிஹானாவுக்கு ஏமாற்றம் அளித்தது. 

போட்டி முடிந்ததும் கெயிலை காண வெஸ்ட் இண்டீஸ் ட்ரெஸிங் ரூமுக்கு சென்றார் ரிஹானா. அங்கு ஆடல் பாடலுடன் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரிஹானாவுக்கு கெயில் கையெழுத்திட்டு தனது பேட்டை பரிசாக வழங்கினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • Chris Gayle meets Rihanna in West Indies dressing room
  • Rihanna gave vocal support to the West Indies in the match vs Sri Lanka
  • West Indies lost by 23 runs to Sri Lanka on Monday
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement