உலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்

Updated: 25 May 2019 14:38 IST

"சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடியது இங்கிலாந்தில் அனுபவமாக இருக்கும்" என்றார் சஹால்.

Yuzvendra Chahal Not Worried About Flat Tracks In England
இங்கிலாந்து ஃப்ளாட் ட்ராக்குகளை கண்டு கவலை கொள்ள போவதில்லை என்று சஹால் கூறியுள்ளார். © AFP

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் ஆடவுள்ளார். பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்கள் மூலமாக இந்த தொடர் அதிக ஸ்கோர்களுக்கான தொடராக அமையும் என்று கூறப்படுகிறது. விராட் கோலி வேறு இந்த தொடரில் ஒரே இன்னிங்ஸில் 500 ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என்றார். எனினும் இந்த ஃப்ளாட் ட்ராக்குகளை கண்டு கவலை கொள்ள போவதில்லை என்று சஹால் கூறியுள்ளார். காரணம் இதே போன்ற தன்மையுடைய பெங்களூருவில் ஆடியுள்ளதாக கூறியுள்ளார்.

"சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடியது இங்கிலாந்தில் அனுபவமாக இருக்கும்" என்றார் சஹால். 41 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 2 ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும்.

"ஃப்ளாட் ட்ராக்குகளில் நான் இருக்கும் பதட்டத்தை போன்றே எதிரணி பந்துவீச்சாளர்களுக்கும் இருக்கும்" என்றார்.

"ரஸல் மற்றும் வார்னர் போன்ற வீரர்களுக்கு பந்துவீசுவதில் எந்த சிரமமும் இல்லை" என்றார் சஹால்.

"ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் ஒரு உத்தியை கையாள வேண்டும். அதனால் ஒவ்வொரு பந்தையும் கவனமாக வீச வேண்டும்" என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகாலுக்கு எதிராக சஹால் நன்றாக பந்துவீசியுள்ளார். எனினும் சஹாலுக்கு மாற்றாக சில போட்டிகளில் ஜடேஜா களமிறங்க வாய்ப்பிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரஸல் மற்றும் வார்னர் போன்ற வீரர்களுக்கு பந்துவீசுவதில் எந்த சிரமமும் இல்ல
  • ஒவ்வொரு பந்தையும் கவனமாக வீச வேண்டும்: சஹால்
  • சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடியது இங்கிலாந்தில் அனுபவமாக இருக்கும்: சஹால்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்
உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்
''இந்தியா - பாகிஸ்தான் மேட்சில் மழைதான் வெற்றி பெறும்'' - சொயிப் அக்தர் கணிப்பு!!
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
இந்தியாவிடன் கிரிக்கெட்டுக்காக கெஞ்ச வேண்டாம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
இந்தியாவிடன் கிரிக்கெட்டுக்காக கெஞ்ச வேண்டாம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
Advertisement