உலகக் கோப்பை 2019: எந்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்..?

Updated: 25 June 2019 12:50 IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து வங்கதேசம், பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது

Points Table: New Zealand On Top India Third
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாத அணிகள் நியூசிலாந்து மற்றும் இந்தியா. இதுவரை 6 போட்டிகளை விளையாடியுள்ள நியூசிலாந்து, 11 புள்ளிகளுடன், அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, 6 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நிலை கொண்டுள்ளது. ரவுண்டு ராபின் சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்தானதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்து வரும் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி, அரையிறுதிக்குத் தகுதி பெறும் எனத் தெரிகிறது. 

tmt8ctig

ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா, உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை ‘ஷாக்' வெற்றி பெற்றதால், மீதம் இருக்கும் அணிகள், அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 2 போட்டிகளில் அவர்கள் வெற்றியடைந்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். தற்போது அந்த அணிக்கு 8 புள்ளிகள் மட்டுமே கைவசம் உள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளில் இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை சந்திக்க வேண்டும். இந்த மூன்று அணிகளையும் இங்கிலாந்து வீழ்த்துவது கடினம்தான் என்று சொல்லப்படுகிறது. 

நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து வங்கதேசம், பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், தான் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளதால், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 

குறிப்பு: வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த தொடரின் 31வது போட்டி வரையேயான புள்ளிகளுக்கான பட்டியல்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. 
 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது
  • நியூசிலாந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது
  • இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோறள்கவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
Ranji Trophy: போட்டியை தாமதப்படுத்திய களத்துக்குள் நுழைந்த பாம்பு!
Ranji Trophy: போட்டியை தாமதப்படுத்திய களத்துக்குள் நுழைந்த பாம்பு!
Advertisement