"எலிசபெத்திடம் வைரத்தை கேளுங்கள்" கோலிக்கு வலியுறுத்திய நெட்டிசன்கள்!

Updated: 30 May 2019 22:37 IST

பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த கோலி ராணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். துவக்க விழா முடிந்ததும் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Virat Kohli Meets Queen Elizabeth, Fans Ask Him To Bring Back Kohinoor
கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடவுள்ளது. © Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சந்தித்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த அவர் ராணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். துவக்க விழா முடிந்ததும் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மற்றும் இந்திய கேப்டன் கோலி இருவரும் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்ததாக ராயல் ஃபேமிலி ட்விட் செய்தது. அதில் ராணி கோலியை பார்ப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.

இந்த படத்தை ட்விட்டரில் அனைவரும் விமர்சிக்க துவங்கினர். ராணியிடம் "கோஹினூர் வைரத்தை கேளுங்கள்" என்று பதிவிட்ட ட்விட்கள் வைரலாகின.

ராபின் ரவுண்ட் முறையில் நடைபெறும் 2019 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடவுள்ளது.

இதற்கு முன் இந்தியா 1983 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைகளை வென்றுள்ளது.

2011 உலகக் கோப்பையை வென்ற கேப்டனான தோனி அணியில் இருப்பது அணிக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி 100வது டெஸ்ட் வெற்றியை பெற்றது நியூசிலாந்து!
முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி 100வது டெஸ்ட் வெற்றியை பெற்றது நியூசிலாந்து!
“ஒரு தோல்வி முழு நம்பிக்கையையும் அழித்து விடாது” - விராட் கோலி!
“ஒரு தோல்வி முழு நம்பிக்கையையும் அழித்து விடாது” - விராட் கோலி!
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்" - பிசிபி வேண்டுகோள்
"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்" - பிசிபி வேண்டுகோள்
Advertisement