2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

Updated: 25 April 2019 18:12 IST

பொலார்ட், நரேன் மற்றும் பிஷூ ஆகியோரது பெயர்கள் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. 

West Indies Include Chris Gayle, Andre Russell In 15-Man Squad
கெயில் ஏற்கெனவே உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணி 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இதோடு சேர்த்து பத்து அணிகளும் உலகக் கோப்பையில் ஆடும் அணிகளை அறிவித்துவிட்டன. இந்த அணிகளை மே 23 ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் கெயில், ரஸல் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றூள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணி:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ரஸல், ஆஷ்லே நர்ஸ், ப்ராத்வொயிட், கெயில், டேரன் ப்ராவோ, இவின் லூயின், ஃபாபியன் ஆலன், கீமர் ரோச், நிகோலஸ் போரான், தாமஸ், சாய் ஹோப், ஷனோன் கேப்ரியல், ஷெல்டன் கட்டேரல், ஹெட்மேயர்.

பொலார்ட், நரேன் மற்றும் பிஷூ ஆகியோரது பெயர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. 

ரஸல் 2015ம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. பங்களாதேஷுக்கு எதிராக 2018ல் ஜூலையில் ஒரு போட்டியில் ஆடினார். ஆனால் ஐபிஎல் 2019ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி வருகிறார். ஒருநாள், டி20 போட்டி தொடர்களின் தவிர்க்க முடியாத வீரராக வருகிறார் ரஸல்.

கெயில் ஏற்கெனவே உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துடனான தொடரில் 135,50,162,77 என ரன்களை குவித்து அசரவைத்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • பொலார்ட், நரேன் மற்றும் பிஷூ ஆகியோரது பெயர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை
  • கடந்த 4 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் ரஸல்
  • இங்கிலாந்துடனான தொடரில் 135,50,162,77 என ரன்களை குவித்தார் கெயில்
தொடர்புடைய கட்டுரைகள்
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
"ஆண்டிகுவாவின் மன்னன்" - விவியன் ரிச்சர்ட்ஸை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
"ஆண்டிகுவாவின் மன்னன்" - விவியன் ரிச்சர்ட்ஸை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
Advertisement