
2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டி தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை அறிவித்தது. இதில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இடம்பெறவில்லை. அமிர் மற்றும் ஆசிஃப் அலி இருவரும் உலகக் கோப்பைக்கு முன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் ஆடவுள்ளனர். அதில் சிறப்பாக ஆடி அணிக்குள் இடம்பிடிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அணி விவரம்:
சர்ஃப்ராஸ் அகமது (கேப்டன்), அபிட் அலி, பாபர் அசாம், ஃபஹிம் அஷ்ரஃப், ஹாரில் சோகைல், ஹசல் அலி, இமாத் வஸிம், இமாம் உல் ஹக், ஜுனைத் கான், முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், ஷஹதப் கான், ஷஹீன் அப்ரிதி, ஷோயிப் மாலிக்
மே 23 வரை உலகக் கோப்பை அணியில் மாற்றங்களை செய்யலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த அணியில் 2017 சாம்பியன் கோப்பையை வென்ற வீரர்களில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். அபிட் அலி, இமாம் உல் ஹக், முகமது ஹஸ்னைன், ஷஹீன் ஷா அப்ரிதி ஆகியோர் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019.#WeHaveWeWill
— PCB Official (@TheRealPCB) April 18, 2019
Read more https://t.co/rTs93eL2eT pic.twitter.com/Ka8fToZMhv
முகமது ஹபீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். அவரது உடல் தகுதி நிரூபிக்கப்படுவதை பொறுத்து இறுதியாக அணியில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அமீர் மற்றும் ஆசிஃப் அலி முக்கியமான வீரர்களாக இருப்பார்கள். மே 23 அன்று இறுதியாகும் அணியில் தேவைப்பட்டால் அவர்கள் இடம்பெறுவார்கள் என்று அணியின் பயிற்சியாளர் இன்சமாம் தெரிவித்துள்ளார்.