“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!

Updated: 19 June 2019 11:26 IST

ஆப்கானிஸ்தான் அடுத்ததாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

Rashid Khan Expensive Spell Inspires Meme Fest, World Cricketers Come To His Rescue
இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.  © Twitter

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 397 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பவுலர் என்று புகழப்படும் சூழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், நேற்று 9 ஓவர்களில் 110 ரன்களை வாரிவழங்கினார். இதைத் தொடர்ந்து அவரை கேலி செய்யும் விதத்தில் இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன. அதில் ‘ஐஸ்லேண்டு கிரிக்கெட்' டீவீட்டிய பதிவு ஒன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல கிரிக்கெட் வீரர்களும் அந்த ட்வீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 

ரஷீத் கான் 110 ரன்கள் கொடுத்ததன் மூலம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற அவப்பெயரை வாங்கியுள்ளார். இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அவர்தான் ரஷீத் கானின் பந்துவீச்சை, மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

ரஷீத் கானின் இந்த மோசமான ஆட்டம், பல மீம்ஸ்களுக்கு வித்திட்டது. 

இது ஒருபுறம் இருந்தாலும் ‘ஐஸ்லாந்து கிரிக்கெட்' நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் சார்பில் முதல் சதத்தை ரஷீத் கான் அடித்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது. 56 பந்துகளில் 110 ரன்கள். ஒரு பவுலரால் உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவே. சிறந்த ஆட்டம் ரஷீத்” என்று கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டது. 

இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

ஆப்கானிஸ்தான் அடுத்ததாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து போட்டியில் ரஷீத் கான் 110 ரன்கள் கொடுத்தார்
  • உலகக் கோப்பை போட்டியில் கொடுக்கப்பட்ட அதிக ரன் இதுவே
  • இங்கிலாந்து இந்தப் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement