2019 உலகக் கோப்பை துவக்கவிழாவில் நடைபெற்ற 60 நொடி சேலஞ்ச்

Updated: 30 May 2019 10:28 IST

இங்கிலாந்தில் நடக்கவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

Opening Party Concludes With England
© Twitter

இங்கிலாந்தில் நடக்கவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 60 நொடி சவால் ஒன்று வீரர்களுக்கு நடத்தப்பட்டது. பக்கிங்ஹாம் மாளிகை அருகில் உள்ள மாலில் இது நடைபெற்றது. ஒவ்வொரு அணி சார்பாகவும் இரண்டு பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த போட்டி அமைந்தது. 60 நொடிக்குள் இந்த இருவரும் எவ்வளவு ரன் அடிக்கிறார்கள் என்பதுதான் போட்டி இதன் நடுவராக டேவிட் பூன் இருந்தார்.

இதில் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே, காலிஸ், விவ் ரிச்சர்ட்ஸ், பிரட் லீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகபட்சமாக இதில் பீட்டர்சன் மற்றும் கிரிஸ் ஹியூக்ஸ் இணை 74 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

பிரெட் லீ மற்றும் பேட் கேஷ் இணை 69 ரன்கள் குவித்து இரண்டாம் இடம் பிடித்தது.

கும்ப்ளே மற்றும் பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் இணை 19 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி இடம்பிடித்தது.

2015 உலகக் கோப்பை வெற்றி கேப்டன் மற்றும் இங்கிலாந்து வீரர் ஸ்வான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

ஐசிசி பாடலுடன் இந்த துவக்க விழா நிறைவு பெற்றது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

சென்ற உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து நம்பர் 1 அணியாக தற்போது களமிறங்குகிறது. இதன் நடுவே இருமுறை அதிகபட்ச ரன்னை பதிவு செய்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"கடும் வலியோடுதான் சில போட்டிகளில் ஆடினேன்"  - ஜோஃப்ரா ஆர்ச்சர்
"கடும் வலியோடுதான் சில போட்டிகளில் ஆடினேன்" - ஜோஃப்ரா ஆர்ச்சர்
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
Advertisement