"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்

Updated: 12 June 2019 10:15 IST

ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Replace Shikhar Dhawan With Rishabh Pant, Says Kevin Pietersen
ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பன்ட் 488 ரன்கள் எடுத்தார். © AFP

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், காயம் ஏற்பட்டுள்ள ஷிகர் தவானுக்கு ரிஷப் பன்ட் மாற்றாக இருப்பார் என கூறியுள்ளார். ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், 33 வயதாக ஷிகர் தவானுக்கு மாற்றை அறிவிக்க இன்னும் பிசிசிஐ எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஐசிசி விதிகளின் படி, பிசிசிஐ தவானுக்கு பதிலாக இன்னொரு வீரரை மாற்ற முடிவெடுத்தால், பின்னர் அவர் குணமடைந்தாலும் அணியில் இணைய முடியாது. கெவின் பிட்டர்சன் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ் தகவல்படி, சிடி ஸ்கேனில் தான் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்துள்ளது, எக்ஸ்ரேவில் தெரியவில்லை. தவான், பயணம் செய்ய வேண்டும் என்றாலும், மருத்துவரின் அறிவுரை தேவைப்படுகிறது. இந்திய அணி எப்போது வேண்டுமானாலும், தவானுக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்கலாம். ஆனால், அவரின் காயம் பற்றியும், குணமடையும் காலம் பற்றியும் தெரிந்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை தவான் சிறப்பாக தொடங்கவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி சதத்தை எட்டி, இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அவர் ஆடிக் கொண்டிருந்த போது, அவர் கையில் காயம் ஏற்பட்டது. இந்தியா ஃபீல்டிங் செய்யும் போது, தவானுக்கு மாற்றாக ஜடேஜா ஆடினார்.

அடுத்த இரண்டு போட்டிகளில் தவான் குணமடையவில்லை என்றால், கே எல் ராகுல் தொடக்க வீரராக இடம்பெற்று, விஜய் ஷங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வியாழனன்று நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. பின்னர், மிகவும் எதிர்பார்க்கும்  பாகிஸ்தானுடனான போட்டி வரும் ஞாயிறன்று நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • மூன்று வாரங்களுக்கு ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்
  • கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ளார்
  • தவானுக்கு மாற்றாக ரிஷ்ப் பன்ட் இருப்பார்: கெவின் பீட்டர்சன்
தொடர்புடைய கட்டுரைகள்
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
பன்டர் என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
Advertisement