இந்தியா Vs நியூசிலாந்து: ரிசர்வ் நாளான இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

Updated: 10 July 2019 13:51 IST

ஒருவேளை ஆட்டம் ரிசர்வ் நாளான இன்றும் முடிவு பெறாமல் போனால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

India vs New Zealand World Cup Semi Final: Manchester Weather Forecast
செவ்வாயன்று நடந்த அரையிறுதி போட்டியின் போது மாலை 6.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. © AFP

உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆனால், ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் மீண்டும் தொடரவுள்ளது. இந்தப் போட்டியில் இதுவரை நியூசிலாந்து 46.1 ஓவரில்  ஐந்து விக்கெட் இழந்து 211 ரன்கள் குவித்துள்ளது. அக்குவெதர் தகவலின்படி, இன்றும் இடை இடையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு மழை பெய்யும் என்றும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மழை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

செவ்வாயன்று நடந்த அரையிறுதி போட்டியின் போது மாலை 6.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை பெய்ததால், மைதானம் முழுவதும் நீரில் மூழ்கியது. அதனால், ஆட்டமும் தடைப்பட்டது.

இரவு 10 மணி அளவில்  மழை நின்றதால், ஆட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 10.40 மணிக்கு மைதானத்தை சோதனை செய்யவும் தொடங்கினர். ஆனால், அதற்குள் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால், ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஒருவேளை ஆட்டம் ரிசர்வ் நாளான இன்றும் முடிவு பெறாமல் போனால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி தடைப்பட்டது
  • ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் மீண்டும் தொடரவுள்ளது
  • நியூசிலாந்து 46.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழந்து 211 ரன்கள் குவித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
Advertisement