ப்ரீ ஹிட்டில் அவுட் ஆகிய கெயில்... சர்ச்சையை ஏற்படுத்திய அம்பயரின் முடிவு!

Updated: 07 June 2019 17:29 IST

நடுவர்கள் ருசித்ரா மற்றும் கஃபோனி இருவரும் மோசமான அம்பயரிங் செய்ததன் மூலம் மேற்கிந்திய தீவுகள் தோல்வியை தழுவ வேண்டியிருந்தது.

Chris Gayle Dismissed Off Free Hit, Michael Holding Calls Umpiring "Atrocious"
கெயில் மற்றும் ஹோல்டர் இருவரும் தவறான அப்மயரிங்கால் ஆட்டமிழந்தனர். © AFP

மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் ஃபிரீ ஹிட்டில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். நடுவர்கள் ருசித்ரா மற்றும் கஃபோனி இருவரும் மோசமான அம்பயரிங் செய்ததன் மூலம் மேற்கிந்திய தீவுகள் தோல்வியை தழுவ வேண்டியிருந்தது. இதனை மைக்கேல் ஹோல்டிங் நடுவர்களின் தவறான முடிவு என்று வர்ணித்துள்ளார். 

டிவியில் பேசிய ஹோல்டிங், "இது நடுவர்களின் செயல்பாட்டில் மிகவும் மோசமானது" என்று குறிப்பிட்டார்.

"ஒரே விஷயத்துக்காக பல முறை நடுவரிடம் முறையிட்டுக்கொண்டே இருக்க முடியாது" என்று கூறி தனக்கு 1979/80களில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "பலமுறை அப்பீல் செய்து நீங்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்றால் நீங்கள் பலவீனமாகிறீர்கள் என்று அர்த்தம்" என்றார்.

ப்ராத்வொயிட்டின் விக்கெட்டும் அம்பயரிங் தவறால் விழுந்தது. கெயில் மற்றும் ஹோல்டர் இருவரும் தவறான அப்மயரிங்கால் ஆட்டமிழந்தனர். நோபாலுக்கு அடுத்த பந்தில் கெயில் ஆட்டமிழந்தார். அதை நோபால் என அறிவித்திருந்தால் அந்த பந்து ஃபிரீ ஹிட் ஆகியிருக்கும். அப்போது அவர் அவுட் ஆகியிருக்க மாட்டார்.

ஆட்டம் முடிந்தது பேசிய ப்ராத்வொயிட், "இதற்காக நான் அபராதம் விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அவர்கள் முடிவு எரிச்சலூட்டியது. இடுப்புக்கு மேல் பறந்த பந்துகளையும் நோபாலாக அறிவிக்காதது வருத்தமளிக்கிறது" என்றார்.

கெயில் இருந்திருந்தால் வெற்றி இன்னும் அருகில் வந்திருக்கும். கஃபோனி மூன்றில் இரண்டு பந்துகளில் கெயிலை அவுட் என்றார். ஆனால் அந்த இரண்டும் ரிவியூவில் தப்பித்தது. 

"இந்த தோல்விக்கு மேற்கிந்திய தீவிகள் அணி எந்த விதத்திலும் காரணமில்லை என்று  அனைவருக்குமே தெரியும்" என்று குறிப்பிட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement