காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!

Updated: 17 June 2019 13:46 IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமிக்கு பதிலாக மைதானத்தின் நிலையை பொறுத்து புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

Bhuvneshwar Kumar Ruled Out Of Next 2-3 World Cup Games With Niggle
காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடுத்த மூன்று போட்டிகளில் ஆடமாட்டார் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். © AFP

காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடுத்த மூன்று போட்டிகளில் ஆடமாட்டார் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமிக்கு பதிலாக மைதானத்தின் நிலையை பொறுத்து புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 3 ஓவர்கள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மற்ற போட்டிகளில் ஷமி இடம்பெறுவார் என்றார் கோலி.

புவனேஷவர் குமார் பந்து வீசும் போது ஸ்லிப் ஆனார். அதனால் ஏற்பட்ட காயத்துக்கு ஓய்வு தேவைப்படுவதால் அடுத்த மூன்று போட்டிகளில் ஆடமாட்டார் என்று பாகிஸ்தானுடனான 89 ரன் வெற்றிக்கு பின் தெரிவித்தார் கோலி.

ஜூன் 22 ஆப்கானிஸ்தான், ஜூன் 27 மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜூன் 30 இங்கிலாந்து ஆகிய போட்டிகளில் ஷமி இடம்பெறுவது உறுதி என கூறியுள்ளார்.

தவான், காயம் காரணமாக வெளியரியதை தொடர்ந்து இது இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக உள்ளது.

2 வார ஓய்வுக்கு பின் தவான் அரையிறுதி சமயத்தில் அணிக்கு திரும்புவார் என்று கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

தவான் மற்றும் புவனேஷ்வர் தங்களது துறையில் சிறப்பான பங்களிப்பை வழஙகினார்கள். இவர்களது காயம் இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • புவனேஷவர் குமார் பந்து வீசும்போது ஸ்லிப்பானார் அதனால் காயம் ஏற்பட்டுள்ளது
  • புவனேஷ்வர் குமார் அடுத்த மூன்று போட்டிகளில் ஆடமாட்டார்: கோலி
  • புவனேஷ்வர் குமாருக்கு பதில் மற்ற போட்டிகளில் ஷமி இடம்பெறுவார்
தொடர்புடைய கட்டுரைகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
2வது ஒருநாள் போட்டி: ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த புவனேஷ்வர் குமார்!
2வது ஒருநாள் போட்டி: ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த புவனேஷ்வர் குமார்!
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் இந்தியாவின் உத்தேச அணி!
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் இந்தியாவின் உத்தேச அணி!
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?

Advertisement