மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்

Updated: 17 May 2019 10:09 IST

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் மற்ற அணிகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருக்கும் என்றார்.

Bhuvneshwar Kumar Issues Warning To Rivals With Improved "Pace And Variations"
இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். © AFP

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் மற்ற அணிகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருக்கும் என்றார். 29 வயதான புவனேஷ்வர் குமார் 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்தார். அரையிறுதியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. அதிலிருந்து புவனேஷ்வர் குமார் தனது பந்துவீச்சிலும், உடல் நிலையிலும் பல முன்னேற்றங்களை செய்துள்ளார்.

தனது பந்துவீச்சில் ஸ்லோ பால், ஸ்விங் பால் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சியுடன் பந்து வீசி வருவதாக உடற்தகுதியை வளர்த்துக் கொள்வதாகவும் கூறினார். 

இந்தியாவின் பலம் பேட்டிங் தான் என்றாலும் பந்துவீச்சிலும் சமபலத்துடன் இந்தியா செயல்பட்டு வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் புவனேஷ்வர் குமார். 

"இங்கிலாந்து ஆடுகளங்கள் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி போனாலும், முதல் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்" என்றார். 

ஷமி, இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளராகவும், பும்ராவின் யார்க்கர்கள் கடைசிகட்ட ஓவர்களில் வலுசேர்க்கும் என்றார்.

கோலியின் கருத்துப்படி இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு ஒரு பன்முகத்தன்மையை அணிக்கு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

"தட்பவெப்பநிலைக்கு ஏற்ப நாங்கள் எங்களை தயார்படுத்திக்கொள்வோம். எங்கள் ஆட்டம் அதனை வெளிப்படுத்தும்" என்றார்.

1983 மற்றும் 2011 சாம்பியனான இந்தியா வரும் ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் ஆடுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!
காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
''கனவு நிஜமானது'' உலகக் கோப்பைக்கு தேர்வானது பற்றி விஜய் சங்கர் நெகிழ்ச்சி
டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
ஐபிஎல் 2019: கே.எல்.ராகுல் அதிரடி; பஞ்சாபுக்கு 4வது வெற்றி! #Highlights
ஐபிஎல் 2019: கே.எல்.ராகுல் அதிரடி; பஞ்சாபுக்கு 4வது வெற்றி! #Highlights
Advertisement