கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!

Updated: 15 July 2019 11:57 IST

இந்தப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளங்களில் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்து ட்விட் பரிமாற்றம் செய்துகொண்டது.

ICC, Wimbledon Engage In Funny Banter On Twitter Amid Tense Moments
இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை வென்றது. © AFP

2019 உலகக் கோப்பை மற்றும் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியை இங்கிலாந்து நடந்தியது. இந்த இரு தொடர்களுக்கான இறுதிப் போட்டி ஒரே நாளில் நடந்தது. இதில் ஃபார்முலா ஒன் ரசிகர்கள் அவர்களுக்கு விருப்பமான போட்டியில் லெவிஸ் ஹாமில்டன் ஆறாவது முறையாக பட்டம் பெற்றதை பார்த்து ரசித்தனர். உலகக் கோப்பை இறுதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்தது. டென்னிஸ் இறுதிப் போட்டி நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic), ரோஜர் ஃபெடரரை (Roger Federer) இருவருக்கு இடையில் நடந்தது. இந்தப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளங்களில் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்து ட்விட் பரிமாற்றம் செய்துகொண்டது.

"ஹலோ ஐசிசி- உங்கள் முடிவை எப்படி சமாளிக்கிறீர்கள்? #Wimbledon #CWC19Final," என்று விம்பிள்டன் ட்விட்டர் பக்கம் பதிவிட்டது.

ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் இதற்கு உடனடியாக பதில் எழுதப்பட்டது, "இப்போது விஷயங்கள் இங்கே பரபரப்பாக உள்ளன. விரைவில் உங்களுடன் இணைகிறோம் #CWC19 | #Wimbledon | #CWC1FINAL".

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் நோவாக் ஜோக்கோவிச், ரோஜர் ஃபெடரர் இருவரும் ஆடினர். 4 மணி 57 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6 (7/5), 1-6, 7-6 (7/4), 4-6, 13-12 (7/3) என்ற கணக்கில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிக் பட்டம் வென்றார்.Things are a bit hectic here right now, we'll get back to you #CWC19 | #Wimbledon | #CWC1FINAL

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து நியூசிலாந்து அணியை வென்றது. இந்த இரு அணிகளும் 50 ஓவர்கள் போட்டி மற்றும் சூப்பர் ஓவர் ஆடியது. இரண்டிலும் போட்டி ட்ராவானது. ஆனால், இங்கிலாந்து அதிக பவுண்டரிகள் அடித்திருந்ததால், அவர்கள் உலகக் கோப்பை வென்ற அணியாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர் அதே ட்விட்டில் ஐசிசி, ரசிகர்களிடம், " சரி, இதை விட விளையாட்டுக்கு சிறந்த நாளாக இருந்துவிட முடியாது. நாளை மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும்?" கேட்டது.

இயான் மோர்கனின் இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்து, போட்டி ட்ராவில் முடிந்தது. பின்னர், 6 பந்துகள் கொண்ட சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்தது. அதனால், போட்டியின் போது அதிக பவுண்டரிகள் அடுத்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
Advertisement