“எங்கு சொதப்பினோம்னா…”- இங்கிலாந்து தோல்வி குறித்து மனம் திறந்த கோலி!

Updated: 01 July 2019 11:13 IST

இந்தியா அடுத்ததாக, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது.

Virat Kohli Says India "Werent Clinical With Bat" In Loss To England
இங்கிலாந்து அடுத்ததாக நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்க உள்ளது. © AFP

உலகக் கோப்பை 2019-ன் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைய இந்தியா, கடைசி வரை போராடியும் 31 ரன்களில் தோல்வியடைந்தது. 

இந்த முறை உலகக் கோப்பையில் இந்தியா சந்திக்கும் முதல் தோல்வி இது. ஆட்டத்தில் ரோகித்தின் சதம், கேப்டன் கோலியின் அதிரடி அரைசதம் ஆகியவற்றையும் தாண்டி, இந்தியாவால் வெற்றி பெற இயலவில்லை. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள கேப்டன் கோலி, “பேட்டிங்கில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாக ஆடியிருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்” என்றார். 

கோலி, ரோகித்தைத் தவிர ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரும், ஆட்டத்தில் அதிரடி காட்டினார்கள். இருவரும் களத்தில் இருக்கும் வரை இந்தியா, வெற்றி பெறும் என்றுதான் தோன்றியது. அதை கோலியும் ஒப்புக் கொள்கிறார். 

“பாண்டியா மற்றும் பன்ட் களத்தில் இருக்கும்வரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், தொடர்ந்து நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தோம். ஒரு பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும்போது அப்படி விக்கெட்டுகளை இழப்பது சரியன்று. இங்கிலாந்து பந்து வீசிய விதம் அற்புதமானது. அவர்களுக்குத்தான் இந்த வெற்றி சமர்ப்பணம்” என்று விளக்கினார் கோலி.

இந்தியாவின் பவுலிங் குறித்து பேசிய அவர், “ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 360 அடிக்கும் என்று தோன்றியது. ஆனால் அவர்களை 330 ரன்களுக்கு சுருக்கியது மகிழ்ச்சி. மொத்தமாக பவுலிங் சிறப்பாகவே இருந்தது” என்றார்.

இந்தியா அடுத்ததாக, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த இரு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றிபெற்றால்தான் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறுவது உறுதியாகும். இங்கிலாந்து அடுத்ததாக நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

Comments
ஹைலைட்ஸ்
  • England handed India their first defeat of World Cup 2019
  • With the win, England keep their semi-finals hopes alive
  • India need to win at least one of their remaining two matches
தொடர்புடைய கட்டுரைகள்
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
Advertisement