'' ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த வீரர் ரோஹித் சர்மா'' : விராட் கோலி பாராட்டு!!

Updated: 08 July 2019 19:05 IST

உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8 இன்னிங்ஸில் மட்டும் அவர் 647 ரன்களை குவித்திருக்கிறார்.

'' ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த வீரர் ரோஹித் சர்மா'' என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். ஹோஹித்தின் ரன் குவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் ரன் குவிப்பதை விட அணியின் வெற்றிதான் முக்கியம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்ற அணிகளை விடவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் ரசிகர்கன் இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர். 

தொடர்ந்து ரோஹித், கோலி, கே.எல். ராகுல் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் கணிசமான ரன்களை குவிக்கின்றனர். அவ்வப்போது தோனியும் தன் பங்குக்கு ஆடி அணி அதிக ஸ்கோரை எட்ட உதவுகிறார். பேட்ஸ்சூமன்களில் குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8 இன்னிங்ஸில் மட்டும் அவர் 647 ரன்களை குவித்திருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒருபக்கம் ரோஹித் சர்மா ரன்களை குவிக்கிறார். கேப்டனாக இருப்பதால் ரன் குவிக்க வாய்ப்புகள் குறைகின்றதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கோலி அளித்த பதிலில் கூறியதாவது-

இந்த உலகக்கோப்பை தொடரில் மாறுபட்ட ரோல் வகித்துள்ளேன். ஒரு கேப்டன் என்ற அடிப்படையில் அணி என்ன எதிர்பார்க்கிறதோ அவை அனைத்தையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். ரோஹித் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஆட்டத்தின் நடுப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மிடில் ஓவர்களில் தோனி, ரிஷப், கேதார் ஆகியோர் பேட்டிங்கின் கவனம் செலுத்துவார்கள். பேட்ஸ்மேன்கள் நல்ல ரன் சேர்த்து வைத்தால், இறுதியில் நான் ரன் குவிப்பில் ஈடுபடுவேன். அணியின் வெற்றிதான் முக்கியம். 

உலகக்கோப்பை தொடரில் அணிக்கான எனது பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 500 ரன்களை ஒரு பேட்ஸ்மேன் குவிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. உலகக்கோப்பை மிகவும் நெருக்கடி வாய்ந்த தொடர். இதில் ரோஹித் சர்வ சாதாரணமாக ரன் குவிக்கிறார். புகழுக்கு தகுதிவாய்ந்த நபர் அவர். என்னைப் பொருத்தளவில் இன்றைய சூழலில் அவர்தான் நம்பர் ஒன் ஒன்டே பேட்ஸ்மேன். 

இவ்வாறு விராட் கோலி கூறினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • அரையிறுதியில் நாளை நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது
  • அரையிறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு விராட் பேட்டி அளித்தார்
  • புகழுக்கு தகுதிவாய்ந்தவர் ரோஹித் சர்மா என்கிறார் விராட்
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
Advertisement