பும்ராவின் பந்துவீச்சை இமிடேட் செய்த விராட் கோலி

Updated: 10 July 2019 18:55 IST

பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறது. எந்த விதமான பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் திறமை பும்ராவுக்கு உள்ளது என புகழ்ந்து வருகிறார்கள். 

India vs New Zealand: Virat Kohli Imitates Jasprit Bumrah
இந்திய கேப்டன் விராட் கோலி பும்ராவின் பந்துவீசும் ஸ்டைலை இமிடேட் செய்துள்ளார். © Twitter

பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறது. எந்த விதமான பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் திறமை பும்ராவுக்கு உள்ளது என புகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பயிற்சியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி பும்ராவின் பந்துவீசும் ஸ்டைலை இமிடேட் செய்துள்ளார். இந்த வீடியோவை ஐசிசி த னது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. அதில், கேப்டன் தனது சிறந்த பந்துவீச்சாளரை இமிடேட் செய்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. 

பும்ரா இந்த தொடரில் 18  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/55. இந்த தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நபர் இவர்.

பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 25 வயதான பும்ரா 57 போட்டிகளில் ஆடி 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27.

இவர் தனது சக பந்துவீச்சாளர்களான ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாருடன் முன்னணியில் உள்ளார். 

இந்த தொடருக்கு பின் இந்தியா மேற்கிந்திய தீவுகளுடன் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆகஸ்ட் 3 துவங்கி செப்டம்பர் 3 வரை ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
Advertisement