பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா

Updated: 18 June 2019 12:25 IST

போட்டிக்குபின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா, பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவையான பதிலை அளித்தார்.

Rohit Sharma
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 140 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இந்திய துணைக் கேப்டன்  ரோஹித் ஷர்மா. © AFP

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 140 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இந்திய துணைக் கேப்டன்  ரோஹித் ஷர்மா. போட்டிக்குபின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா, பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவையான பதிலை அளித்தார். அந்த பத்திரிக்கையாளர், தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என கேட்க, "நான் பாகிஸ்தான் பயிற்சியாளரானால் அவர்களிடம் சொல்கிறேன்" என்று பதிலளித்தார்.

மைதானத்தின் அனைத்து இடங்களிலும் பந்தை விரட்டி அசத்தினார் ரோஹித் ஷர்மா. காயமடைந்த தவானுக்கு பதிலாக களமிறங்கிய ராகுலும் சிறப்பாக ஆடி அசத்தினார்.

ராகுல், ரோஹித் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்தனர். இது பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் சிறந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. 

முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்தில் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ரோஹித் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் தனது 24வது சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

"நான் இரட்டை சதத்தை பற்றி யோசிக்கவில்லை. எவ்வளவு ரன் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் ஆடியதாக குறிப்பிட்டார் ரோஹித் ஷர்மா. 

உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இது ஏழாவது போட்டி. 7 போட்டிகளையும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.

தற்போது 4 போட்டிகளில் ஆடியுள்ள இந்தியா, 3 வெற்றி ஒரு போட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

இந்தியா அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று முதல் நான்கிடத்துக்குள் ஒரு இடத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
கோலி போல் நடித்து காட்டிய ஜடேஜா...கண்டுபிடித்த ரோகித்...பார்த்து ரசித்த கோலி...! #Viralvideo
கோலி போல் நடித்து காட்டிய ஜடேஜா...கண்டுபிடித்த ரோகித்...பார்த்து ரசித்த கோலி...! #Viralvideo
Advertisement