உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!

Updated: 28 May 2019 09:29 IST

செல்ஸே வீரரும், முன்னாள் ப்ரேசில் கேப்டனுமான டேவிட் லூயிஸ் தனது வாழ்த்து செய்தியை கோலிக்கு வீடியோவாக தெரிவித்துள்ளார்.

Virat Kohli, Team India Get Special Message From Chelsea Star David Luiz Ahead Of World Cup. Watch
2014ம் ஆண்டு கோலி செல்ஸே ஜெர்ஸியோடு இங்கிலாந்து பயணத்தில் போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. © Twitter

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ம் தேதி துவங்கவுள்ளது. இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் அணிகளாக பெரும்பாலானவர்களால் கணிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் இந்திய கேப்டன் கோலியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் கோலி அவருக்கு டோட்டன்ஹாம் மற்றும் லிவர்பூல் இடையே நடக்கவுள்ள சாம்பியன் லீக் இறுதிப்போட்டிக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் செல்ஸே வீரரும், முன்னாள் ப்ரேசில் கேப்டனுமான டேவிட் லூயிஸ் தனது வாழ்த்து செய்தியை கோலிக்கு வீடியோவாக தெரிவித்துள்ளார்.

டேவிட் லூயிஸ் இந்திய அணிக்கும், கோலிக்கு கோப்பையை வெல்ல வாழ்த்துக்களையும் தான் இந்திய அணியை ஆதரிப்பதாகவும் கூறினார்.

2014ம் ஆண்டு கோலி செல்ஸே ஜெர்ஸியோடு இங்கிலாந்து பயணத்தில் போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கேப்டனாக கோலி முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்துகிறார். இது அவருக்கு முன்றாவது உலகக் கோப்பை ஆகும். 

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 6ம் தேதி எதிர்கொள்கிறது.

இந்தியா பயிற்சி போட்டியில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் ஜடேஜா 50 பந்தில் 54 ரன்களை குவித்தார்.

இந்தியா நிர்ணயித்த இலக்கை நியூசிலாந்து 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. கேன் வில்லியம்சன் 67, ராஸ் டெய்லர் 71 ரன்கள் குவித்தனர். மே 28ம் தேதி பங்களாதேஷுடன் பயிற்சி போட்டியில் இந்தியா ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தொடர்ச்சியாக மோசமான ஃபார்மில் விராட் கோலி... விமர்சிக்கும் ரசிகர்கள்!
தொடர்ச்சியாக மோசமான ஃபார்மில் விராட் கோலி... விமர்சிக்கும் ரசிகர்கள்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
Advertisement