இந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி! #Video

Updated: 03 July 2019 10:13 IST

2019 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன

Virat Kohli Takes Blessings From Elderly Indian Fan After Beating Bangladesh In World Cup Tie - Watch
அடுத்ததாக இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்ளும். அத்துடன் இந்தியாவின் லீக் போட்டிகள் முடிவுக்கு வரும்.  © Twitter

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று இந்தியா - வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. இந்த ஆட்டத்தை நேரில் காண சாருலதா படேல் என்னும் 87 வயது இந்திய ரசிகை வந்திருந்தார். போட்டியின் தொடக்கம் முதல் முடிவு வரை சாருலதா படேல், உற்சாகமாக இந்திய அணியை சப்போர்ட் செய்து வந்தார். ஆட்டத்தின் போதே, சாருலதா படேல், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். போட்டி முடிந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரை சந்தித்து ஆசி பெற்றார். 

சாருலதாவை சந்தித்த போட்டோவையும் விராட் ட்விட்டரில் பகிர்ந்தார். “எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. குறிப்பாக சாருலதா படேல் ஜி. அவருக்கு வயது 87. ஆனால் மிகவும் ஆர்வமுடைய ரசிகர்களில் அவரும் ஒருவர். வயது என்பது ஒரு எண் என்பதை சாருலதா நமக்கு நிரூபித்துள்ளார். அவருடைய ஆசியுடன் நாங்கள் அடுத்தப் போட்டிக்குத் தயாராகி வருகிறோம்” என்று கூறியுள்ளார் கோலி. 

அந்த வீடியோவைப் பாருங்கள்: 

சாருலதா படேல் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நான் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து வருகிறேன். 1983 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோதும் நான் மைதானத்தில் இருந்தேன். இந்தியா, இந்த முறையும் உலகக் கோப்பையைக் கைப்பற்றும். கடவுளிடம் அதற்காக பிரார்த்திப்பேன். இந்திய அணிக்கு எனது ஆசீர்வாதம் உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

2019 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. அடுத்ததாக இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்ளும். அத்துடன் இந்தியாவின் லீக் போட்டிகள் முடிவுக்கு வரும். 

Comments
ஹைலைட்ஸ்
  • வங்கதேசத்தை இந்தியா, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
  • இந்தப் போட்டியில் ரோகித் ஷர்மா சதமடித்தார்
  • இந்த வெற்றியின் மூலம் இந்தியா, அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
டெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்!
டெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்!
"அவர் என்னை உடற்பயிற்சி சோதனையைப் போல் ஓட செய்தார்"  - தோனி குறித்து கோலி!
"அவர் என்னை உடற்பயிற்சி சோதனையைப் போல் ஓட செய்தார்" - தோனி குறித்து கோலி!
Advertisement