"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி

Updated: 15 May 2019 16:44 IST

33 வயதான தினேஷ் கார்த்திக், தோனிக்கு முன்னதாகவே வெள்ளை மற்றும் சிவப்பு பந்துகளில் ஆடியவர். 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெறுவது இது 2வது முறை.

Virat Kohli Reveals Why Dinesh Karthik Was Picked Over Rishabh Pant In India 2019 World Cup Team
"கடினமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவார்" என்று விராட் கோலி கூறியுள்ளார். © AFP

இந்தியா, உலகக் கோப்பைக்கான அணியை கடந்த மாதம் அறிவித்தது. அதன்பிறகு, அணி வீரர்களின் தேர்வு பேசு பொருளாகியது. அதில் ஒன்று, ரிஷப் பன்ட்டை தேர்வு செய்யாமல் தினேஷ் கார்திக்கை தேர்வு செய்தது. இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், ரிஷப் பன்ட் விடுவிக்கப்பட்டது எதிர்பாராத ஒன்று, தினேஷ் கார்த்திக்கின் அனுபவத்தை மனதில் வைத்து மட்டுமே இந்த தேர்வு நடந்ததாக கூறியிருந்தார். இப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அதே விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். இதுவே, ரிஷப் பன்ட்டை தேர்வு செய்ய முடியாமல் போனதற்கான காரணமாகவும் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் தோனி மட்டுமே பிரதான விக்கெட் கீப்பராக இருப்பார் என்றும், அவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும் பிரசாத் தெளிவாக கூறியிருந்தார்.

மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை போட்டி அணிகள் மே 23ம் தேதிக்குள் மாற்றம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

"கடினமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவார்" என்று விராட் கோலி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தெரிவித்தார். "இதனை அணியில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்" என்றார்.

"அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. தோனிக்கு எதாவது நடந்தால், அவர் ஸ்டம்புக்கு பின்னால் இருந்தி சிறப்பாக செயல்படுவார். போட்டியையும் கச்சிதமாக முடிக்கக் கூடியவர். இதெல்லாம் கருத்தில் கொண்டு தான் தினேஷ் கார்த்திக் அணியில் தேர்வு செய்யப்பட்டார்" என்று கோலி தெரிவித்தார்.

33 வயதான தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டு வீரர் ஆவார். தோனிக்கு முன்னதாகவே வெள்ளை மற்றும் சிவப்பு பந்துகளில் ஆடியவர். 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெறுவது இது 2வது முறை. முதல் முறை 2007ம் ஆண்டு இடம்பெற்றார்.

கார்த்திக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2004ம் ஆண்டு தொடங்கி, இதுவரை இந்தியாவுக்காக 91 போட்டிகள் ஆடியுள்ளார். ஆனால், பன்ட் இதுவரை 5 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். 50 ஓவர் போட்டியை கடந்த அக்டோபர் மாதம் தான் ஆடத் தொடங்கினார்.

இதுவரை தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதனால், எந்த இடத்தில் ஆட நேர்ந்தாலும், சிறப்பாக ஆடக் கூடியவர்.

"அணியில் சிறந்த வீரர்கள் சிலர் விடுப்பட்டுள்ளனர். ஆனால், சிறந்த வீரர்கள் மத்தியில் 15 பேரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள். எதற்கும் தயாராக இருங்கள். சந்தர்ப்பம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என்றார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்தியா,  உலகக் கோப்பையில் முதல் போட்டியாக ஜீன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • அனுபவம்தான் பன்ட்டுக்கு பதில் கார்த்திக் தேர்வு செய்யப்பட காரணம்: கோலி
  • தோனிக்கு காயம் ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக் விக்கெட்கீப்பிங் செய்வார்
  • முதல் போட்டியாக ஜீன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிர்கொள்கிறது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
Advertisement