சச்சின், லாரா ரெண்டு பேரும் சாதனையும் ‘க்ளோஸ்’… கெத்துகாட்டும் கிங் கோலி!

Updated: 21 June 2019 12:27 IST

அடுத்ததாக இந்திய அணி, உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

India vs Afghanistan: Virat Kohli Puts Sachin Tendulkar, Brian Lara
இதற்கு முன்னர் கோலி, அதிவகேமாக 11,000 ஒருநாள் ரன்களை கடந்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, சாதனைகளை முறியடிப்பது டீ சாப்பிடுவது போல இருக்கிறது. தனது கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை அநாயாசமாக முறியடித்தவர் கிங் கோலி. தற்போது இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். ஒருவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இன்னொருவர் ‘நி லெஜண்டு' பிரயன் லாரா. 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவுக்குத் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் 20,000 சர்வதேச ரன்களை ஸ்கோர் செய்ய 453 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டனர். ரிக்கி பாண்டிங்கிற்கு 468 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் இதுவரை 415 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கோலி எடுத்திருக்கும் சர்வதேச ரன்கள், 19,896 ஆகும். இதுவரை கோலி 131 டெஸ்ட் போட்டிகள், 222 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அடுத்ததாக இந்திய அணி, உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் 104 ரன்கள் எடுத்தால், கோலி, சச்சின் மற்றும் லாராவின் சாதனைகளை முறியடித்துவிடுவார். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் கடந்த இரண்டு போட்டிகளில் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 

இதற்கு முன்னர் கோலி, அதிவகேமாக 11,000 ஒருநாள் ரன்களை கடந்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். 

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. தற்போது புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 


 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி, சாதனை படைக்க வாய்ப்புள்ளது
  • சாதனைகளை முறிப்பதை தொழிலாகவே வைத்துள்ளார் கோலி
  • உலகின் தற்காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன் கோலிதான்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
Advertisement