இங்கிலாந்து போட்டியில் திணறிய தோனி… முட்டுக்கொடுக்கும் கேப்டன் கோலி!

Updated: 01 July 2019 10:41 IST

ஆட்டத்தின் கடைசி வரை களத்தில் இருந்த தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி, வெறும் 36 ரன்களை மட்டுமே சேர்த்தது.

Virat Kohli On MS Dhoni
இலக்கை அடைய இந்தியா, கடைசி வரை போராடியும் 31 ரன்களில் தோல்வியடைந்தது © AFP

உலகக் கோப்பை 2019-ன் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைய இந்தியா, கடைசி வரை போராடியும் 31 ரன்களில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோனி கடைசி வரை களத்தில் இருந்தும், இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தர தவறிவிட்டார். அவரின் நிதானமான ஆட்டம் பலமட்டங்களில் இருந்து கேள்வியெழுப்பியுள்ளதன. 

இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “தோனி, போட்டியில் பவுண்டரிகள் அடிக்கத்தான் முயன்றார். ஆனால், அவர் எவ்வளவு முயன்றும் அது சாத்தியப்படவில்லை. 

இங்கிலாந்து ஆபாரமாக பந்துவீசியது. இதுவே, போட்டியின் இறுதியில் ஆட கடினமாக அமைந்தது. இந்தப் போட்டியில் நாங்கள் செய்த தவறுகள் குறித்து ஆராய்ந்து, அடுத்தப் போட்டியில் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஆட்டத்தின் கடைசி வரை களத்தில் இருந்த தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி, வெறும் 36 ரன்களை மட்டுமே சேர்த்தது. இருவரது ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இவர்கள் இருவரும் முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பொறுமையாக விளையாடியது விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது சச்சின் டெண்டுல்கர் கூட, அவர்கள் அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்தார். இப்படி தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், இருவரும் தங்களது ஆட்டத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்து விடவில்லை. 

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
  • தோனியில் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன
  • ஜாதவுடன் தோனியின் பார்ட்னர்ஷிப்பும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement