"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி

Updated: 10 June 2019 20:27 IST

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் ஸ்டெம்புகளின் எடை அதை சுற்றியுள்ள வயர்களின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என கூறப்படுகிறது.

India vs Australia: Virat Kohli Mocks Zing Bails After David Warner Reprieve
பும்ரா வீசிய பந்து வார்னர் பேட் செய்யும் போது ஸ்டெம்பில் பட்டது. ஆனால் பெயில் கீழே விழவில்லை மற்றும் லைட்டும் எரியவில்லை. © AFP

பும்ரா வீசிய பந்து வார்னர் பேட் செய்யும் போது ஸ்டெம்பில் பட்டது. ஆனால் பெயில் கீழே விழவில்லை மற்றும் லைட்டும் எரியவில்லை. இது தனக்கு ஆச்சர்யம் தந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் ஸ்டெம்புகளின் எடை அதை சுற்றியுள்ள வயர்களின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என கூறப்படுகிறது. இதே போன்ற நிகழ்வுகள் ஆஸ்திரேலிய அணிக்கும் நடந்துள்ளது.

போட்டிக்கு பின் பேசிய கோலி, "சர்வதேச கிரிக்கெட்டில் இதெல்லாம் எதிர்பாராதது. இது தவிர்க்கப்பட வேண்டியது" என்றார். 

"இந்த தொழில்நுட்பம் நிறப்பானது தான். லைட்டுகளால் சில முடிவுகளை தெளிவாக எடுக்க முடிகிறது. ஸ்டெம்பை கடுமையாக தாக்கினால் தான் விக்கெட் கிடைக்கும் என்று நக்கலாக கூறிய கோலி. இதை நான் பேட்ஸ்மெனாக தான் சொல்கிறேன்" என்று கூறி சிரித்தார்.

"சில நல்ல பந்துகள் விக்கெட்டுக்களை தராமல் போகும். ஆனால் ஸ்டெம்ப்பை தாக்கி லைட் எரியாமல், பெயில்ஸ் விழாமல் இருந்தால் அது வருந்தக்கூடிய விஷயமே" என்றார்.

"இது இன்று மட்டுமல்ல பலமுறை நடந்திருக்கிறது" என்றார் கோலி.

கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement