'ரெக்கார்ட் ப்ரேக்கர்' கிங் கோலி - நேற்றைய போட்டியில் நிகழ்த்திய சாதனைகள்

Updated: 01 July 2019 15:41 IST

நாளை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் இந்தியா.

Virat Kohli Joins Steve Smith In Elite World Cup Club
2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 382 ரன்கள் குவுத்துள்ளார் கோலி © AFP

ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை செய்வதையே வேலையாக வைத்துள்ளார் விராட் கோலி. அப்படி நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியிலும் ஒரு சில சாதனைகளை தனக்குரியது ஆக்கியுள்ளார் கோலி.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்தது மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரைசதம் அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற சாதனையை தனக்குரியதாக்கினார் கோலி.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் விராத் கோலி, வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 72, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 67, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 77, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 82 ரன்கள் குவித்திருந்தார்.

மேலும் உலகக்கோப்பையில் தொடர்ந்து ஐந்து அரைசதங்கள் அடிக்கும் முதல் கேப்டன் கோலி தான். நேற்றைய போட்டியில் 66 ரன்கள் குவித்தது மூலம் இங்கிலாந்தில் ஓடிஐகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு 1,238 ரன்கள் குவித்து ராகுல் டிராவிட் இந்த பெருமையை பெற்றிருந்தார்.

2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 382 ரன்கள் குவித்துள்ளார் கோலி. ரோஹித் சர்மா 440 ரன்கள் குவித்துள்ளார்.

நாளை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் இந்தியா.

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்தில் ஓடிஐகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை கோலி
  • தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரைசதம் அடிக்கும் இரண்டாவது வீரர் கோலி
  • 2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 382 ரன்கள் குவித்துள்ளார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement