''தோனி சாமர்த்தியம் கோலியிடம் இல்லை'' - தோனியின் பள்ளி பயிற்சியாளர்

Updated: 10 May 2019 18:33 IST

2019 உலகக் கோப்பையில் தோனி நான்காம் இடத்தில் ஆடவேண்டும் என்று அவரின் பள்ளி பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Does Not Have MS Dhoni
"தோனி எப்போது ஓய்வுபெறுவார் என்பதை அவரது மனைவி, தந்தையே அறிய முடியாது" என்றார் கேசவ் பானர்ஜி. © AFP

"2019 உலகக் கோப்பையில் விராட் தலைமையிலான இந்திய அணிக்கு தோனி சிறந்த மெண்டாராக இருப்பார்" என்று தோனியின் பள்ளி பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் தோனிக்கு பள்ளிக்கூடத்தில் பயிற்சியாளராக இருந்தவர் ஆவார். "தோனி முக்கியமான நேரங்களில் உத்திகளை வகுக்கும் திறன் கொண்டவர். கோலிக்கு தோனியின் இந்த குணம் கண்டிப்பாக தேவை. தோனியிடமிருந்து அனுபவத்தையும், முக்கியமான நகர்வுகளையும் கோலி எடுக்க வேண்டும். ஏனென்றால் கோலி தோனியை விட உத்திகளை வகுப்பதில் வல்லவரல்ல" என்றார். 

"ஒருவேளை தோனி அணியில் இல்லையென்றால் கோலிக்கு உதவ அங்கு யாருமே இருக்க மாட்டார்கள்" என்றார்.

மேலும், "தோனியின் பேட்டிங் நிலை என்ன என்பதும், இந்தியாவின் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதில் கணக்க முடியாததாக உள்ளது. தோனி நான்காம் இடத்தில் ஆடவேண்டும்" என்றார்.

"எப்போது அவர் நான்காவது வீரராக ஆடுகிறாரோ அப்போது ஆட்டத்தின் கடினத்தன்மை குறையும். அதற்கு பின்வரும் வீரர்களும் அழுத்தமின்றி ஆடுவார்கள் இது என் தனிப்பட்ட கருத்து. அணி நிர்வாகம் இதனை யோசிக்க வேண்டும்" என்றார்.

பன்ட் உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துகள் இடம்பெறும்போது பானர்ஜி ''இது வேகமான முடிவு. அவருக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. உலகக் கோப்பைக்கு பின் அவரை அதிகம் பயன்படுத்தலாம்" என்றார். 

தோனி உலகக் கோப்பைக்கு பின் தனக்கு ஓய்வளிக்கலாமா என்ற கேள்விக்கு, அவரை ஓய்வுபெறச் சொல்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். "தோனி எப்போது ஓய்வுபெறுவார் என்பதை அவரது மனைவி, தந்தையே அறிய முடியாது" என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • "தோனியிடமிருந்து அனுபவத்தையும், நகர்வுகளையும் கோலி எடுக்க வேண்டும்"
  • தோனி நான்காம் இடத்தில் ஆடவேண்டும் - கேசவ் பானர்ஜி
  • உலகக் கோப்பைக்கு பிறகு பன்ட்டுக்கு அதிக வாய்ப்பளிக்கலாம்
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement