சாதனை மேல் சாதனை செய்யும் 'கிங்' கோலி...!

Updated: 28 June 2019 12:09 IST

இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளை எதிர்கொளகிறது இந்தியா அணி.

சாதனைகளை செய்வதிலும் சாதனைகளை முறியடிப்பதிலும் தனக்கு நிகர் எவருமில்லை என ஒவ்வொரு போட்டியிலும் நிருபித்து வருகிறார் கிங் கோலி.

நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டிஸை எதிர்கொண்டது இந்தியா. அதில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் விரைவாக 20,000 ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை நேற்று படைத்தார். 417 சர்வதேச இன்னிங்ஸ்களில் 20,000 ரன்களை கடந்துள்ளார் கோலி. இதற்கு முன்பு சச்சின் மற்றும் லாரா ஆகியோர் 453 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது.

131 டெஸ்ட் இன்னிங்ஸ், 224 ஓடிஐ இன்னிங்ஸ், 62 டி20 இன்னிங்ஸ் என மொத்தம் 417 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்கள் குவித்து மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார் கோலி. அவர் ஓடிஐகளில் 11,124 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 6,613 ரன்களும் டி20 களில் 2,263 ரன்களும் குவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய போது 11,000 ஓடிஐ ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் கோலி.

இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளை எதிர்கொளகிறது இந்தியா அணி.

Comments
ஹைலைட்ஸ்
  • 417 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்கள் குவித்து சாதனையை படைத்துள்ளார் கோலி
  • சச்சின் மற்றும் லாரா ஆகியோர் 453 இன்னிங்ஸ்களில் இதனை செய்தனர்
  • 11,000 ரன்கள் குவித்த அதிவேக வீரரும் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement