இந்திய ரசிகர்களின் செயலுக்காக ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்ட கோலி!

Updated: 10 June 2019 12:31 IST

போட்டி மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை கிண்டல் செய்த போது, அவர்களை உற்சாகப்படுத்த கைதட்டும் படி கேட்டுக்கொண்டார் கோலி.

Virat Kohli Apologises To Steve Smith On Behalf Of "Booing" Indian Fans
விராட் கோலி, 77 பந்தில் 82 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சிறந்த மனிதர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். © AFP

இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று உலகக் கோப்பை தொடரில் மோதின. இதில் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் தங்களின் பேட்டிங்கை உயிர்பித்துள்ளனர். விராட் கோலி, 77 பந்தில் 82 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சிறந்த மனிதர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். போட்டி மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை கிண்டல் செய்த போது, அவர்களை உற்சாகப்படுத்த கைதட்டும் படி கேட்டுக்கொண்டார் கோலி. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய கோலி, "ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிண்டல் செய்யும் விதமாக எதுவும் செய்யவில்லை" என்று கூறினார். இந்திய ரசிகர்களின் இந்தச் செயலுக்கு கோலி ஸ்மித்திடம் நேரடியாக மன்னிப்பு கேட்டுகொண்டார்.

இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு, உலகத்துக்கு முன்பு இந்திய ரசிகர்கள் தவறான உதாரணமாக விளங்கக் கூடாது என்று கேட்டு கொண்டார்.

"இதுவரை நடந்தது நடந்து விட்டது, அவர் திரும்ப வந்துவிட்டார், கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார், அவர் அணிக்காக சிறப்பாகவும் ஆடி வருகிறார்" என்றார் கோலி.

"இங்கு நிறைய இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தவறான உதாரணமாக இருக்க நான் விரும்பவில்லை. என்னை பொறுத்த வரைக்கும் கலாட்டா செய்யும் அளவிற்கு அவர் எதுவும் செய்யவில்லை."

"நான் அந்த நிலைமையில் இருந்தால், மன்னிப்பு கேட்ட பிறகும் ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டால் நானும் அதை விரும்ப மாட்டேன்" என்று விளக்கம் தெரிவித்தார் கோலி.

அரைசதம் எடுக்கும் வரை வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ரன்கள் எடுக்க ஓடிக்கொண்டிருந்தனர். 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. கடந்த இரண்டு போட்டிகளில் வென்று இந்தியாவுடனான இந்தப் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ஷிகர் தவானின் 117 ரன்கள் மற்றும் அவர் ரோஹித் ஷர்மாவுடன் பார்டர்ஷிப்புடன் குவித்த 127 ரன்கள் என இந்தியா அதிக ரன்கள் எட்ட உதவியாக இருந்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • கலாட்டா செய்யும் அளவிற்கு ஸ்மித் எதுவும் செய்யவில்லை: கோலி
  • கோலி மற்றும் ஸ்மித் இருவரும் தங்களின் பேட்டிங்கை உயிர்பித்துள்ளனர்
  • வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ரன்கள் எடுக்க ஓடிக்கொண்டிருந்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement