“ஷங்கரா… இது அடுக்குமா..?”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்!

Updated: 28 June 2019 13:59 IST

ஆல்-ரவுண்டராக களமிறக்கப்பட்ட விஜய் ஷங்கரை, கேப்டன் விராட் கோலி, கடைசி இரண்டு போட்டிகளில் பவுலிங்கிற்காக பயன்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Shankar Trolled For Dismal Batting Show At No. 4
பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஷங்கர், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  © AFP

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சார்பில் விளையாடி வரும் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கரின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் இந்திய அணி சார்பில் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக 4வது இடத்தில் இறங்கி, சொற்ப ரன்களில் அவுட்டாகியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்தான் விஜய் ஷங்கர், முதன்முறையாக களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய விஜய் ஷங்கர், 15 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4வது இடத்தில் இறக்கிவிடப்பட்டார். அதில் 29 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். நேற்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் 4வது இடத்தில் இறங்கினார் ஷங்கர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 14 ரன்கள் எடுத்தபோது, கீமார் ரோச் வீசிய பந்தில் கீப்பர்-கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இப்படி தொடர்ந்து ரன் எடுக்காமல் சொதப்பி வந்த ஷங்கரை, நெட்டிசனஸ், பாரபட்சம் பார்க்காமல் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுத்துள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்தது குறித்து இநியா மகிழ்ச்சியடையலாம். ஆனால், பேட்டிங்கில் இருக்கும் சுணக்கத்தை இந்தியா சரிசெய்தாக வேண்டும். ஷங்கருக்கு இன்னும் அதிகபட்சமாக ஒரு போட்டி கொடுக்கப்படலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆனால் ரசிகர்களுக்கோ, விஜய் ஷங்கரின் ஃபார்மின்மை, மீம்ஸ்களை உருவாக்க களமாக அமைந்துவிட்டது. 

ஆல்-ரவுண்டராக களமிறக்கப்பட்ட விஜய் ஷங்கரை, கேப்டன் விராட் கோலி, கடைசி இரண்டு போட்டிகளில் பவுலிங்கிற்காக பயன்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஷங்கர், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெற்றியை அடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் தோல்விபெறாத ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா. அடுத்து வரும் 3 போட்டிகளில் இந்தியா, ஒன்றில் வெற்றி பெற்றால் கூட, அரையிறுதி இடம் உறுதியாகிவிடும். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • 4வதாக களமிறங்கும் ஷங்கர், அதிக ரன்கள் எடுக்கத் தவறிவிட்டார்
  • வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 14 ரன்னில் அவுட் ஆனார் ஷங்கர்
  • அந்தப் போட்டியில் இந்தியா, 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
இந்திய ஏ அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஷிகர் தவான்!
இந்திய ஏ அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஷிகர் தவான்!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
Advertisement