''கனவு நிஜமானது'' உலகக் கோப்பைக்கு தேர்வானது பற்றி விஜய் சங்கர் நெகிழ்ச்சி

Updated: 16 April 2019 11:30 IST

சன்ரசர்ஸ் அணியின் பயிற்சியாளரான விவிஎஸ் லட்சுமணன் இந்தியாவின் உலகக் கோப்பை அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதாக கூறினார்.

Vijay Shankar Says "Dream Come True" After Making It To World Cup Squad
"கனவு நிஜமாகியுள்ளது" உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பிறகு விஜய் சங்கர் கூறியுள்ளார். © AFP

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கரின் உலகக் கோப்பை கனவு நினைவாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த விஜய் சங்கர், "கனவு நிஜமாகியுள்ளது. உலகக் கோப்பை போன்ற போட்டி தொடர்களில் அழுத்ததை எப்படி கையாளவேண்டும் என்பதை, ஐபிஎல் அணியின் சக வீரரான புவனேஷ்வர் குமார் போன்றவர்களிடமிருந்து கற்றுகொள்கிறேன்" என்றார் கூறினார். 

விஜய் சங்கர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கைகொடுப்பார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இந்தியா தடுமாறும் நான்காம் நிலை வீரருக்கு தகுதியான வீரராக விஜய் சங்கர் இருப்பார் என்று கூறப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் கலக்கும் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புவனேஷ்வர் குமார் கூறும் போது '' உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கிலாந்து மைதாங்களில் சிறப்பாக பந்துவீச முடியும்" என்று கூறினார். மேலும், "ஐபிஎல் தொடர் அதற்கு நல்ல பயிற்சியாக அமையும்" என்றார். 

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளரான விவிஎஸ் லட்சுமணன் இந்தியாவின் உலகக் கோப்பை அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதாக கூறினார். விஜய் சங்கர் மற்றும் புவனேஷ்வர் குமார் அணிக்கு வலு சேர்ப்பார்கள் என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா உலகக் கோப்பை அணியை பலம் வாய்ந்ததாக தேர்வு செய்துள்ளது: லட்சுமணன்
  • விஜய் சங்கரின் உலகக் கோப்பை கனவு நினைவாகியுள்ளது
  • புவனேஷ்வர் தன்னுடைய இரண்டாவது உலகக் கோப்பை போட்டியில் ஆடவுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
''கனவு நிஜமானது'' உலகக் கோப்பைக்கு தேர்வானது பற்றி விஜய் சங்கர் நெகிழ்ச்சி
500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்!
500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்!
3-வது ஒருநாள் போட்டி அப்டேட்ஸ்: பாண்ட்யா உள்ளே; தோனி, விஜய் சங்கருக்கு ரெஸ்ட்!
3-வது ஒருநாள் போட்டி அப்டேட்ஸ்: பாண்ட்யா உள்ளே; தோனி, விஜய் சங்கருக்கு ரெஸ்ட்!
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
Advertisement