உலகக் கோப்பை 2019: இந்தியாவின் தொடர் வெற்றியை வெ.இண்டீஸ் தடுக்குமா?

Updated: 27 June 2019 11:21 IST

அணியில் இருக்கும் ரிஷப் பன்டை, ஆடும் 11 பேரில் இறக்குவது குறித்து கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரி இதுவரை முடிவெடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

West Indies vs India, Preview: Unbeaten India Face Edgy West Indies In Run-Up To Semi-Finals
கடைசியாக இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டியில், தோனி 52 பந்துகள் பிடித்து 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரின் இந்த நிதான ஆட்டம் பலரால் விமர்சிக்கப்பட்டது.  © AFP

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது. இந்திய அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 6 போட்டிகள் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டும்தான் வெற்றியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரது அணுகுமுறைதான் கவனத்திற்குரிய விஷயமாக இருக்கும். கடைசியாக இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டியில், தோனி 52 பந்துகள் பிடித்து 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரின் இந்த நிதான ஆட்டம் பலரால் விமர்சிக்கப்பட்டது. 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூட, “தோனியின் ஆட்டத்தில் ஒரு நேர்மறையான அணுகுமுறையே இல்லை” என்று விமர்சனம் செய்தார். 

ரவுண்டு ராபின் சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், தோனிக்கு முன்னர் ஜாதவ் களமிறக்கப்படலாம். அந்த வகையில் அவர், அதிரடி ஆட்டத்தை ஆடுவாரா என்பதை அணி நிர்வாகம் சோதிக்க வாய்ப்புள்ளது. 

ஹர்திக் பாண்டியா, ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் போட்டியில் அவருடன் யாரும் சரியாக ஆடாத காரணத்தால், அழுத்தம் காரணமாக தனது விக்கெட்டைப் பாண்டியா சுலபமாக விட்டுக் கொடுத்தார். 

அணியில் இருக்கும் ரிஷப் பன்டை, ஆடும் 11 பேரில் இறக்குவது குறித்து கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரி இதுவரை முடிவெடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது. விஜய் ஷங்கருக்கு பதில் வேண்டுமானால் அவர் விளையாட வாய்ப்புள்ளது. 

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, உற்று நோக்குவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டாலும், நல்ல முறையில் தொடரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்தாலும், அடுத்தடுத்தப் போட்டிகளில் திணறியது அந்த அணி. ஆண்ட்ரே ரஸலும் இல்லாததால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவது கடினமாகத்தான் இருக்கும். 

Comments
ஹைலைட்ஸ்
  • மான்செஸ்டரில் இன்றைய போட்டி நடக்க உள்ளது
  • உலகக் கோப்பையில் இந்திய அணி, இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை
  • வெஸ்ட் இண்டீஸ், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
“எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு..!”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா
“எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு..!”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா
“ஷங்கரா… இது அடுக்குமா..?”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
“ஷங்கரா… இது அடுக்குமா..?”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது!”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்
“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது!”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்
உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard
உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்: இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் எப்படி?
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்: இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் எப்படி?
Advertisement