"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்

Updated: 18 June 2019 16:01 IST

பாகிஸ்தான் அணிக்கு மழை குறுக்கீட்டால் 40 ஓவரில் 302 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானால் வெறும் 212 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

"This India Team Intimidates Pakistan": Waqar Younis
பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. © AFP

பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தற்போது உள்ள இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணியாக உள்ளது. இந்தியாவின் எழுச்சி பாகிஸ்தானை அடிபணிய வைத்துள்ளது. "சர்ஃப்ராஸ் தலைமையிலான அணி எந்த விதத்திலும் இந்திய அணியை விட சிறப்பாக இல்லை. அதனால் தான் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது" என்றார். ரோஹித் ஷர்மா 113 பந்தில் 140 ரன்களை குவித்து இந்திய அணியை மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். பாகிஸ்தான் அணிக்கு மழை குறுக்கீட்டால் 40 ஓவரில் 302 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானால் வெறும் 212 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. 

"இந்திய அணி ஒரு அணியாக இணைந்து வீரர்களின் பங்களிப்போடு ஆடுகிறது. ஆனால் பாகிஸ்தான் ஒரு தனி நபரை சார்ந்து ஆடுகிறது அதுதான் தோல்விக்கு காரணம்" என்றார் வாக்கர் யூனிஸ்.

"கடந்த சில வருடங்களாக இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது. அதுதான் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

"1990களில் இரு அணிகளும் சம்பலம் வாய்ந்த அணிகளாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணி சிறந்த அணியாக உள்ளது" என்றார். 

ரோஹித் அபாரமாக ஆடி இந்தியாவுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தந்தார். இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். ஒருகட்டத்தில் இரட்டை சதமடிப்பார் என்ற அளவுக்கு ஆடி வந்த அவர் எதிர்பாராத விதமாக 39வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மா 113 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 140 ரன்கள் குவித்தார்.

ஷிகர் தவானுக்கு மாற்றாக களமிறஙகிய ராகுல் 78 பந்தில் 57 ரன்கள் குவித்து ரோஹித் ஷர்மாவுக்கு பார்ட்னர்ஷிப் தந்தார்.

நேற்றைய போட்டியில் 7 பவுண்டரியுடன் 65 பந்தில் 77 ரன்கள் குவித்தார் கோலி

"பாகிஸ்தானின் தொடர்ச்சியற்ற பந்துவீச்சு தாக்குதலை நேர்த்தியாக எதிர்கொண்டனர் இந்திய பேட்ஸ்மேன்கள்" என்று கூறினார் வக்கார் யூனிஸ்.

"ஆமிர் மட்டுமே பந்துவீச்சில் கவனம் ஈர்ப்பதாகவும், வஹாப் ரியாஸ், ஹசன் போன்றவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை" என்றார்.

மீதமுள்ள 4 போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறலாம் என்ற நிலையில் ஜூன் 23 தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். 

Comments
ஹைலைட்ஸ்
  • பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது
  • உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை
  • ரோஹித் ஷர்மா 113 பந்தில் 140 ரன்களை குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
‘கோலி இருப்பதால் உலக கோப்பையில் இந்தியா கெத்து காட்டும்!’- வக்கார் யூனிஸ்
‘கோலி இருப்பதால் உலக கோப்பையில் இந்தியா கெத்து காட்டும்!’- வக்கார் யூனிஸ்
Advertisement