“மைதானம் உங்களை மிஸ் செய்யும்”- தவானுக்கு மோடியின் உருக்கமான ட்வீட்!

Updated: 21 June 2019 12:49 IST

தவானுக்கு பதில் இளம் வீரரான ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

PM Narendra Modi Sends Wishes For Speedy Recovery To Shikhar Dhawan
ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ஷிகர் தவானின் கட்டை விரலைப் பதம்பார்த்தது.  © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானுக்கு, கட்டை விரல் முறிவு ஏற்பட்டுள்ளதால், உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார். நல்ல ஃபார்மில் இருந்த தவானின் இழப்பு, இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. தவான் விலகலை அடுத்து, பல கிரிக்கெட் ரசிகர்கள், அவரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “டியர் தவான், உங்களை மைதானம் மிஸ் செய்யும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், உங்களுக்கு சீக்கிரமாக காயம் சரியாகி மீண்டும் களத்துக்குத் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன். அதன் மூலம் நமது தேசத்துக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தர வேண்டும்” என்று உருக்கமாக ட்வீட்டியிருந்தார். 

உலகக் கோப்பைத் தொடரில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ஷிகர் தவானின் கட்டை விரலைப் பதம்பார்த்தது. 

காயம் ஏற்பட்ட பின்னரும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடிய தவான், அதிரடி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் இந்தியா, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. தவானுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அந்தப் போட்டியிலேயே தவான், ஃபீல்டிங்கிற்கு வரவில்லை. டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டார். 

காயம் தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட தவான், “2019 உலகக் கோப்பையில் நான் இனி விளையாட மாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்டை விரல் சீக்கிரமாக குணமடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து விளையாட்டு நடைபெற வேண்டாம். எனது அணியினர், கிரிக்கெட் விரும்பிகள் மற்றும் மொத்த தேசமும் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி. ஜெய்ஹிந்த்” என்று கூறியிருந்தார். 

தவானுக்கு பதில் இளம் வீரரான ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • சீக்கிரமாக குணமடைய வேண்டும் என தவானை பிரதமர் வாழ்த்தினார்
  • கட்டை விரல் முறிவு காரணமாக தவான், உலகக் கோப்பையிலிருந்து விலகல்
  • தவானுக்கு பதில் ரிஷப் பன்ட் அணியில் ணேர்க்கப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
Advertisement