
2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றது. அதில், இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்தது ஏற்க முடியவில்லை என்று கூறி அதற்கு மாற்று யோசனை வழங்கியுள்ளார். ஒருவேளை சூப்பர் ஓவர் டையானால், வெற்றியாளரை முடிவு செய்ய இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தப்படவேண்டும். 46 வயதான இவர், இந்த விதி உலகக் கோப்பையோடு நிறுத்திவிடாமல், எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
"வெற்றியாளரை முடிவு செய்ய இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும், பவுண்டரிகள் எண்ணிக்கை வைத்து முடிவு செய்யக்கூடாது. உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல், எல்லா போட்டிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும். எல்லாப் போட்டிகளும் முக்கியமானவைதான். ஃபுட் பால் போலவே அதிகே நேரம் எடுத்தால் ஒன்றும் தவறில்லை" என்றார் டெண்டுல்கர்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, "விளையாட்டில் இருக்கும் சில விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது" என்றார்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், நியூசிலாந்து அணியில் நூலிழை தோல்விக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
"நான் இந்த விதியை ஏற்க மாட்டேன். ஆனால், விதிகள் எப்போதும் விதிகளே. உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இறுதி வரை போராடிய நியூசிலாந்து அணி என்னுடைய இதயத்தில் நிற்கிறார்கள். சிறந்த போட்டி" என்று யுவராஜ் சிங் ட்விட் செய்தார்.
உலகக் கோப்பை போட்டியில் பவுண்டரி விதி வைத்து வெற்றியாளரை முடிவு செய்தது இதுவே முதல் முறை.