"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்

Updated: 15 June 2019 11:54 IST

அமீர், 2019 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

India vs Pakistan: Sachin Tendulkar Advices Indian Batsmen To Stay Positive Against Mohammad Amir
ரோஹித் மற்றும் விராட் நீண்ட இன்னிங்ஸில் ஆட வேண்டும் அவர்கள் அதிக ஓவர்கள் ஆடினாலே வெற்றி வசப்படும் என்றார் அமீர். © AFP

உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இந்திய பேட்டிங்கிற்கும், பாகிஸ்தான் பந்துவீச்சுக்குமான சவாலாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. அமீர், இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அமீர் இந்திய கேப்டன் கோலிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அமீரின் பந்துவீச்சால் பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பயப்படாமல் அதனை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக அமீருக்கு எதிராக டாட் பால்களை ஆடாமல் ரன்கள் குவிக்கும் மனநிலையில் பாசிட்டிவாக அணுக வேண்டும் என்று கூறினார். அமீருக்கு எதிராக எந்த புதிய உத்திகளையும் கையாள வேண்டாம் என்றார்.

"ரோஹித் மற்றும் விராட் நீண்ட இன்னிங்ஸில் ஆட வேண்டும் அவர்கள் அதிக ஓவர்கள் ஆடினாலே வெற்றி வசப்படும்" என்றார். அதேபோல் அவர்கள் அமீரை எச்சரிக்கையோடு அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். 10 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை 307 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.

தவான் காயம் காரணமாக ராகுல் துவக்க வீரராகவும், சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் 4வது வீரராகவும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி!
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
Advertisement