உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்

Updated: 06 July 2019 10:29 IST

இலங்கைக்கு எதிராக ஹீடிங்லியில் இந்திய அணி விளையாடும்.

Sri Lanka vs India: Dinesh Karthik Says Team Management Has Made It Clear "Where I
அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டாலும், அணியின் மிடில் ஆர்டரில் ஸ்திரமான பேட்டிங் இல்லாதது பிரச்னையாக உள்ளது. © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, லீக் சுற்றில் தனது கடைசி போட்டியை இன்று விளையாட உள்ளது. இலங்கைக்கு எதிராக ஹீடிங்லியில் இந்திய அணி விளையாடும். அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டாலும், அணியின் மிடில் ஆர்டரில் ஸ்திரமான பேட்டிங் இல்லாதது பிரச்னையாக உள்ளது. இந்தியாவின் ஸ்திரமற்ற மிடில் ஆர்டர் பேட்டிங்கால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து மிடில் ஆர்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம். குறிப்பாக விஜய் ஷங்கருக்கு பதில் ரிஷப் பன்ட், கேதார் ஜாதவுக்கு பதில் தினேஷ் கார்த்திக் ஆகியோரை வங்கதேசப் போட்டியில் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கிவிட்டது. அந்தப் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்தது. இந்நிலையில் இலங்கைப் போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியுள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், அணியில் தனது ரோல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

“அணியில் நான் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகம் எனக்குத் தெளிவாக கூறிவிட்டது. சேசிங்கில் களமிறங்கினால், அதற்கு ஏற்றாற் போல் எனது ஆட்டத்தை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பேட் செய்தால், அணிக்கு வலுவான ஸ்கோர் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நான் காத்திருந்தேன். இதில் நன்றாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் உள்ளது. இனி களத்திற்கு சென்று திறனை வெளிக்காட்ட வேண்டும். வங்கதேசப் போட்டியில் நான் திட்டமிட்டபடி ஆட்டம் போகவில்லை. ஆனால், அடுத்து வரும் போட்டிகளில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று கூறினார். 

சேசிங்கின் போது இந்திய அணி திணறுவது குறித்து பேசிய கார்த்திக், “இந்திய அணியில் சேசிங்கின் போது சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் உள்ளனர். எனவே, இந்திய அணியின் பலங்களில் அதுவும் ஒன்று” என்று விளக்கினார். 

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக், 7வது இடத்தில் களமிறங்குவார்
  • கேதார் ஜாதவுக்கு பதில் கார்த்திக், களமிறக்கப்பட்டார்
  • இன்று இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்!!
15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்!!
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
Advertisement