இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?

Updated: 12 July 2019 14:15 IST

விராட் கோலி மற்றும் அவரின் அணியினர், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் உலகக் கோப்பை இறுதிச் சுற்று முடியும் வரை இங்கிலாந்தில் இருந்து, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்தில்  கண்டுகளிக்கவுள்ளனர்.

Team India Stranded In England Till World Cup Final After Semi Final Exit
நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. © AFP

உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியது. நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் நடந்தது.  இருந்தாலும், விராட் கோலி மற்றும் அவரின் அணியினர், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் உலகக் கோப்பை இறுதிச் சுற்று முடியும் வரை இங்கிலாந்தில் இருந்து, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்தில்  கண்டுகளிக்கவுள்ளனர். டிக்கெட் கிடைத்தவுடன் இந்திய வீரர்கள் சிறு குழுக்களாக இந்தியா வந்தடைவார்கள் என்று கூறுப்படுகிறது. "வீரர்கள் அனைவரும் ஜூலை 14ம் தேதி வரை மான்செஸ்டரில் இருந்து, பின்னர் நாட்டுக்கு திரும்புவார்கள். அரையிறுதி போட்டிகள் முடிந்த நிலையில், வீரர்களுக்கு டிக்கெட் போடுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி இறுதிக்கு செல்லவில்லை என்றாலும், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை காண இங்கிலாந்து விரைந்துள்ளனர். உலகக் கோப்பை இறுதியை காண பெரும்பாலும், யுனைட்ட கிங்டம் சேர்ந்த ரசிகர்களே அதிகம் இருப்பார்கள்.

உலகக் கோப்பை இறுதிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டன. இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியிருந்தாலும், இந்திய ரசிகர்கள் போட்டிக்கு முன்பே தங்களின் ட்ரிப்பை ப்ளான் செய்து இங்கிலாந்து சென்றிருந்தனர். 

இந்திய அணி இறுதிக்கு செல்லாததால், இந்திய ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டை விற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐசிசி டிக்கெட் விற்கும் தளம், டிக்கெட்டின் மறுவிற்பனை சதவிகிதம் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது.

டிக்கெட் வாங்கிய நபர் ஒரு தளத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தால், டிக்கெட் வேண்டுமென்று நினைப்பவர் அங்கு பதிவு செய்தால், ஏற்கெனவே டிக்கெட் வாங்கியவருக்கு இ-மெயில் மூலம் தகவல் அளிக்கப்படும். 

டிக்கெட் விலை பிரான்ஸ்(95 பவுண்ட்), வெள்ளி(195), தங்கம்(295) மற்றும் பிளாட்டினம்(395) என்று நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டன.

இதே பிரிவுகளில் குறைந்த விலையான 20, 30 மற்றும் 40 பவுண்ட் கொண்ட டிக்கெட்டுகளும் விற்றாகிவிட்டன.

"டிக்கெட் மறுவிற்பனை தளம் பிஸியாகவே இருந்தது. ஆனால், டிக்கெட்டுகள் எதுவும் பெரிதாக விற்கபடவில்லை. இறுதிச்சுற்றுக்கு மக்களிடையில் ஆர்வம் அதிகமாக தான் உள்ளது. டிக்கெட் விற்க நினைத்தால், எங்களிடம் தனியாகவே அதற்கான தளம் உள்ளது" இந்தியாவின் தோல்வி டிக்கெட் விற்பனையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு ஐசிசி செய்தி தொடர்பாளர் பதலளித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் மயங்க் அகர்வால்!
India vs Bangladesh: டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் மயங்க் அகர்வால்!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
India vs Bangladesh: டெஸ்ட் போட்டிகளில் 3வது சதத்தை குவித்தார் அகர்வால்!
India vs Bangladesh: டெஸ்ட் போட்டிகளில் 3வது சதத்தை குவித்தார் அகர்வால்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
Advertisement