"2019 உலகக் கோப்பையில் தோனியின் பங்கு மகத்தானது" - சுனில் கவாஸ்கர்!

Updated: 16 May 2019 14:28 IST

தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்தும், விராட் கோலியின் ஃபீல்டிங் திறமையை குறித்தும் கவாஸ்கர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Sunil Gavaskar Explains Why MS Dhoni Has To Play A “Massive" Role For India In World Cup
தோனி நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவிப்பார் - கவாஸ்கர் © AFP

ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இருக்கும் தோனி, உலகக் கோப்பை போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். " இந்திய அணியில் சிறந்த மூன்று பேர் உள்ளனர். ஒருவேளை அவர்களால் சரியாக ஆட முடியாத நிலையில், தோனி நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவிப்பார்" என்று கவாஸ்கர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்தும், விராட் கோலியின் ஃபீல்டிங் திறமையை குறித்தும் கவாஸ்கர் குறிப்பிட்டு பேசியுள்ளார். "தோனிக்கு இருக்கும் விக்கெட் கீப்பிங் திறமை நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், அங்கு இருந்து கொண்டு, ஸ்பின்னர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும், எங்கு வீச வேண்டும், ஃபீல்டிங்கில் சிறு மாற்றங்கள் சொல்வது என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் சிறப்பான ஒன்று. அதனால், தோனி எப்போது மகத்தான மனிதர்" என்று அவர் கூறினார்.

"விராட் கோலி, மைதானத்தில் வீரர்களின் இடங்களை சரியாக தேர்வு செய்வதில் வல்லவர். ஃபீல்டிங் செட் செய்வது, யாரை எங்கு நிற்க வைக்க வேண்டும் என்று சரியாக கணிக்கக் கூடியவர்" என்று விராட் கோலியின் கேப்டன்ஸி குறித்தும் கூறியுள்ளார்.

"2011ம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி வழி நடத்தினார். அணியினர் மீது இருக்கும் பாரத்தை எல்லாம் குறைத்து அணியை 2011ம் ஆண்டு வெற்றி பெற செய்தார்.  அதனால், தோனி போன்று ஒருவர் இந்த அணியில் இருப்பது அணி வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றார் கவாஸ்கர்.

"எனவே, உலகக் கோப்பையில் தோனியின் பங்கு மகத்தானது" என்று முடித்தார் கவாஸ்கர்.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி 4 அல்லது 5 ஆகிய இடத்தில் ஆட வேண்டும்: கவாஸ்கர்
  • ஸ்டம்ப்புக்கு பின்னால் இருந்து தோனி சிறப்பாக செயல்படுவார்
  • தோனி தலைமையில் இந்தியா 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
Advertisement