"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்

Updated: 18 June 2019 17:53 IST

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஃபீல்டிங்கின் போது கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யக்கூடாது என்று மைதனத்திலிருந்தே சைகை செய்து நிறுத்தினார்.

Lovely Gesture By Virat Kohli, Says Steve Smith About Indian Skipper Asking Fans Not To Boo Him
ஓராண்டு தடைக்கு பின் அணிக்கு திரும்பிய ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் மைதானத்தில் விமர்சித்தனர். © Twitter

இந்திய கேப்டன் கோலி தோற்றாலும், வென்றாலும் எதிரணி வீரர்களை மனது நோகாதபடி நடத்த வேண்டும் என்று நினைப்பவர். அதேபோல் ஒரு நிகழ்வுதான் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போதும் நிகழ்ந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஃபீல்டிங்கின் போது கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யக்கூடாது என்று மைதனத்திலிருந்தே சைகை செய்து நிறுத்தினார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையிலிருந்து மீண்டு ஓராண்டு தடைக்கு பின் அணிக்கு திரும்பிய ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் மைதானத்தில் விமர்சித்தனர்.

ஸ்மித், "இந்த நிகழ்வை நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இந்திய கேப்டன் கோலியின் உடனடி ரியாக்‌ஷன் ரசிகர்களை அமைதியாக்கியது உண்மையிலேயே பாரட்டுதலுக்குரியது" என்று கூறியுள்ளார்.

மேலும், ஆட்டத்துக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கோலி ஸ்மித்திடம் இந்திய ரசிகர்களுக்காக மன்னிப்பும் கோரினார்.

"அங்கு நிறைய இந்திய ரசிகர்கள் இருந்தனர். நான் ஒரு தவறான உதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களை சமாதானப்படுத்தினேன்" என்றார் கோலி.

"அங்கு ஸ்மித் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் கட்டாயம் பிரச்சனை நடக்கும். அவர்கள் சார்பாக நான் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

"ஸ்மித் மற்றும் வார்னர் தொடர்ந்து ரசிகர்களின் விமர்ச்னத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் அதைப்பொறுட்படுத்தாமல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் வேறு, தனிநபரை தாக்குவது வேறு அதனை நாம் ஆதரிக்கூடாது" என்றார்.

"எது நடந்ததோ... அது நடந்து முடிந்தது. அவர் மீண்டு வந்துவிட்டார். அவர் தற்போது அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்" கோலி தெரிவித்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
தலையைப் பதம்பார்த்த பவுன்சர்… சுருண்டு விழுந்த ஸ்மித்… குலுங்கி சிரித்த ஆர்ச்சர்- ஆஷஸ் பகீர்!
தலையைப் பதம்பார்த்த பவுன்சர்… சுருண்டு விழுந்த ஸ்மித்… குலுங்கி சிரித்த ஆர்ச்சர்- ஆஷஸ் பகீர்!
Advertisement