‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video

Updated: 26 June 2019 11:57 IST

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குத் தகுதி பெறும் முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது ஆஸ்திரேலியா. 

Mitchell Starc Castles Ben Stokes With Stunning Yorker, Leaves Twitter In Awe. Watch
ஸ்டார்க், நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் ஆக்ரோஷமான பவுலிஙை வெளிப்படுத்தினார். இதற்கு ஒரு காரணம் இருந்ததாகவும் அவர் சொல்கிறார் © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெகரன்டார்ஃப், 5/44 என்ற பவுலிங் மூலம் கெத்து காட்டினார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஸ்டார்க், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் மட்டும், தனியாக போராடிக் கொண்டிருந்தார். அவர் 115 பந்துகளுக்கு 89 ரன்கள் அடித்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டோக்ஸுக்கு, மிட்சல் ஸ்டார்க் போட்ட இன்-ஸ்விங் யார்க்கர், ஸ்டம்பை பதம் பார்த்தது. 

ஸ்டார்க் போட்ட யார்க்கரை மட்டும் கட் செய்து ட்விட்டரில் பகிர்ந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி. இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து, “இந்த உலகக் கோப்பையின் சிறந்த பந்து இதுதான்” என்று ஸ்டார்கிற்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். 
 
ஸ்டார்க், நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் ஆக்ரோஷமான பவுலிஙை வெளிப்படுத்தினார். இதற்கு ஒரு காரணம் இருந்ததாகவும் அவர் சொல்கிறார். “நான் காலை அரைத் தூக்கத்துடன் எழுந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர், என் பவுலிங் குறித்து கேலியாக பேசினார். உலகக் கோப்பையில் விளையாடினால் இதைப் போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இது விளையாட்டின் ஒரு அங்கம் என்று” என விளக்கினார். 

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குத் தகுதி பெறும் முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது ஆஸ்திரேலியா. 
 
(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • ஸ்டோக்ஸுக்குத்தான் ஸ்டார்க், யார்க்கர் போட்டார்
  • நேற்றைய போட்டியில் இங்கி., 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸியிடம் தோற்றது
  • வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
தொடர்புடைய கட்டுரைகள்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் சந்தேகம்!
இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் சந்தேகம்!
Advertisement