உலகக் கோப்பை 2019: ‘அள்ளு’ கொடுத்த பூரான்; வெ.இண்டீஸை போராடி வீழ்த்திய இலங்கை!

Updated: 02 July 2019 10:04 IST

தற்போதைக்கு ஆஸ்திரேலியா மட்டும்தான், உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள ஒரே அணியாக திகழ்கிறது

Sri Lanka vs West Indies: Sri Lanka Survive Nicholas Pooran Scare, Beat West Indies By 23 Runs
முன்னதாக இலங்கை, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அப்போது அந்த அணிக்கு அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பிருந்தது © AFP

2019 உலகக் கோப்பையில் நேற்று இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இலங்கை. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன. அதே நேரத்தில் கவுரவத்துடன் தொடரிலிருந்து வெளியேறும் நோக்கில் இரு அணிகளும் விளையாடின. 

முதலில் பேட்டிங் செய்த இலங்கை,50 ஓவர்களுக்கு 338 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா ஃபெர்ணாண்டோ, சதமடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத் தீவுகள், முதலில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தன. ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல், 35 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

ஆனால் 23 வயதேயான பூரான், ஒரு புறம் விக்கெட் விழாமல் தடுத்து நிறுதிதனார். 35வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணிக்குக் கடைசி 3 ஓவர்களின் 31 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்த நேரத்தில்தான் இலங்கை கேப்டன் கருணரத்னே, யாரும் எதிர்பாராத விதமாக, பந்தை ஆஞ்சலோ மாத்யூஸிடம் கொடுத்தார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாத்யூஸ், ஒருநாள் போட்டிகளில் பந்துவீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் முதல் பந்திலேயே பூரான், தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் அந்த அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

முன்னதாக இலங்கை, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அப்போது அந்த அணிக்கு அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பிருந்தது. ஆனால் தென் ஆப்ரிக்கா உடனான அடுத்தப் போட்டியில் அடைந்த மோசமான தோல்வியால் இலங்கையின் அரையிறுதிக் கனவு பொய்த்துப் போனது. 

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கெத்து காட்டியது. ஆனால், அதைத் தொடர்ந்து ஒரு போட்டியில் கூட அந்த அணி வெற்றி பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் சொதப்பலே. 

தற்போதைக்கு ஆஸ்திரேலியா மட்டும்தான், உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள ஒரே அணியாக திகழ்கிறது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கும் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இரு அணிகளுக்கும் அரையிறுதிக்குப் போக வாய்ப்பில்லை
  • இலங்கை முதலில் பேட் செய்து 338 ரன்கள் எடுத்தது
  • வெஸ்ட் இண்டீஸ், 315 ரன்களை மட்டுமே எடுத்தது
தொடர்புடைய கட்டுரைகள்
கெயிலை பார்க்க ட்ரெஸிங் ரூமுக்கு வந்த பாப் உலகின் ராணி!! பேட்டை பரிசாக அளித்த கெய்ல்!
கெயிலை பார்க்க ட்ரெஸிங் ரூமுக்கு வந்த பாப் உலகின் ராணி!! பேட்டை பரிசாக அளித்த கெய்ல்!
உலகக் கோப்பை 2019: ‘அள்ளு’ கொடுத்த பூரான்; வெ.இண்டீஸை போராடி வீழ்த்திய இலங்கை!
உலகக் கோப்பை 2019: ‘அள்ளு’ கொடுத்த பூரான்; வெ.இண்டீஸை போராடி வீழ்த்திய இலங்கை!
Advertisement